பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் - 47 டால்ஸ் : அந்த உரிமையும் என் காலத்துக்குப் பிறகு அவளுக்குக் கிடையாது. இனிமேல் உலகமே என் வீடு... எல்லோரும் இந்தக் கிழவனின் பிள்ளைகள். நான் பிள்ளைகளுக்கிடையே பேதம் காட்டாத பெருந்தந்தை... அலெக்ஸ் : அப்பா, உங்களை நினைக்கிறபோது எனக்குப் பெருமையாகவும் இருக்கு. பயமாகவும் இருக்கு. அம்மா உங்களை சும்மா விடுவாளா? டால்ஸ் : ஆண்டவன் விட்ட வழி. சரி, உங்கம்மா பழைய படியும் ஒட்டு கேட்கிறாள் போலிருக்கு. நீங்க சீக்ரமா போயிடுங்க. (அலெக்ஸாண்ட்ரியா செர்ட்கோவுடன் போக) சோன்யா : (வந்து) என்ன லியோ... ஏதோ உயில் கியில்னு பேச்சுக் கேட்டது. ஏன் பேசமாட்டீங்கறீங்க... என்ன பேசினீங்க... சொல்லுங்க லியோ! டால்ஸ் : சோன்யா, எனக்கு பொய் பேசத் தெரியா துன்னு சொல்லலே... நான் சொல்ல விரும்பலே... இது என் சொந்த விவகாரம். இதுலே நீ தலையிடக் கூடாது. கேட்டாலும் நான் சொல்லப் போறதில்லே. சோன்யா : எனக்கு இப்போதான் புரியது. அலெக் ஸாண்ட்ரியா வீட்டைவிட்டுப் போனதிலே ஒரு மர்மம் இருக்கு. இந்த வீட்லே ஏதோ சூது நடக்குது. சதி நடக்குது. எனக்கு இப்போ டயரி வேணும். நீங்க எழுதின எல்லாமே வேணும்.