பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 + லியோ டால்ஸ்டாய் நீங்களே ஒரு சீர்திருத்தவாதி ஆயிட்டீங்க. என் படைப்புகள் எல்லாம் எல்லோருக்கும் சொந்தம் என்று சொல்லி எல்லோருக்கும் பொதுச் சொத்தாய் ஆயிட்டீங்க. இதனால்தான் பெர்நாட்ஷா, காந்தி, ரோமன் ரோல்லான்ட் (Roman Rolland) முதலிய எல்லா மேதைகளும் நீங்க சொல்றத வேத வாக்காக் கருதறாங்க... டால்ஸ்டாயிஸம் டால்ஸ்டாயைவிடப் பெரியது. டால்ஸ்டாயே அதை எதிர்த்தாலும் நாங்கள் டால்ஸ்டாயிஸத்தைப் பாதுகாப்போம். இல்லையா அங்கிள் செர்ட்கோவ்? செர்ட் : இதிலென்ன சந்தேகம். டால்ஸ் : நான் அவள் பிரச்சினையை அனுதாபத்தோடு தான் பார்க்கச் சொன்னேனே தவிர அதை நிறைவேற்றச் சொல்லலே. நீங்க சொல்லும் முன்னாலேயே நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இரண்டு நாளைக்கு முன்னால் அந்த உயிலுக்கு சம்மதிக்கிறதாக முடிவெடுத்துட்டேன். என் காலத்துக்குப் பிறகு என் மகள் அலெக்ஸாண்ட்ரியாவிடம் என் படைப்புகள் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட வேண்டும். அவள் அதை செர்ட்கோவிடம் வெளியிடுவதற்காகக் கொடுக்க வேண்டும். இதிலிருந்து வருகிற வருமானத்தை ஏழை எளியவர்களுக்காகச் செலவிட வேண்டும். வக்கீலை வரவழைத்து கை எழுத்தும் போட்டுட்டேன். அலெக்ஸ் : 1881ஆம் ஆண்டுக்கு முன்னால் எழுதுனது எல்லாம் அம்மாவுக்கு சொந்தம்னு சொன்னிங்களே... அது...