பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 5 இடம் : டால்ஸ்டாய் அறை. நேரம் : இரவு வேளை. பாத்திரங்கள் : லியோ-டால்ஸ்டாய்-சோன்யாடாக்டர் காஷா செர்டகோவ். (டால்ஸ்டாய் மேஜை அருகில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்-சோன்யா மகன் லியோவை அழைத்து வருகிறாள்) லியோ : குடும்பத்தைக் கட்டிக் காப்பாற்றத் தெரியலே, பெரிய எழுத்து எழுதறாராம்! மனைவியைக் கலங்கவிடாமல் வைக்கத் தெரியலே... உபதேசம் பண்றாராம் உபதேசம்! அப்பா, அம்மாவை எதுக்காக வீட்டைவிட்டுத் துரத்தினிங்க? டால்ஸ் : லியோ, நீ எனக்கு இளைய மகன்னு தெரியும். இளைத்த மகன்னு நினைக்கலே. கொஞ்சம் மெள்ளப் பேசு- எனக்குக் காது நல்லா கேட்குது. செவிடா யிருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். லியோ : கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க... அம்மாவை எதுக்காகத் துரத்தினிங்க?