பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 லியோ டால்ஸ்டாய் டால்ஸ் : நான் எங்கடா துரத்தினேன். அவளா புலம்பிட்டு அவளே போனாள்... என்னை என்ன பண்ணச் சொல்றே? லியோ : நான் மட்டும் பார்க்காட்டா என்னைப் பெற்ற அம்மா... உங்களுக்கு மனைவியாகப் போய்... ஒரு பலனும் அடையாத இந்தப் பாவி இந்நேரம் செத்து இருப்பா... இந்தத் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கிடப் போனாள் ! (துப்பாக்கியை எடுத்துக் காட்டுகிறான்.) டால்ஸ் : அந்த துப்பாக்கிய இப்படிக் கொடுடா. (வாங்கி தனக்கெதிராக வைத்து சுடுகிறார். வெடிப்பு சத்தம் மட்டும் கேட்கிறது.) பாத்தியாடா... இது விளையாட்டுத் துப்பாக்கி... உன் அம்மா விளையாடினாள். சோன்யா : ஆமாம். எனக்கு பதினாறு வயசு, உங் களுக்கு இருபது... விளையாடறேன். லியோ : அப்பா, குழந்தை மாதிரி நடிக்க வேண்டாம். இன்னிக்கு ரெண்டிலே ஒண்ணு தெரியணும்... தெரிஞ்சாகணும். டால்ஸ் ; டேய், நீ குழந்தையாக இருக்கும்போது உனக்கு விளையாட்டு காட்டுறதுக்காக புலிமாதிரியும் ஓனாய் மாதிரியும் நடிச்சேன். இப்ப அந்தக் குழந்தை நிஜமாகவே ஒரு ஓனாயா மாறிடிச்சு. அது முன்னால என்னால நடிக்க முடியுமா? அப்போ நீ சந்தோஷமா, இருக்கிறதுக்காக நடிச்சேன். இப்போ நீ பெத்த அப்பனை புரிஞ்சுக்காம போனதுக்காக துடிக்கிறேன்.