பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 51 லியோ பெத்த அப்பன். நீங்களா பெத்த அப்பன்? டால்ஸ் : சந்தேகமா இருந்தா உன் அம்மாவையே கேளு. சோன்யா ; டேய் லியோ, இந்த கிழத்துகிட்ட பேசி நீ ஜெயிக்க முடியுமா... விஷயத்துக்கு வாடா... லியோ : என்றைக்கு சொந்தப் பிள்ளைகளை ஊர்ப் பிள்ளைகளாகவும், ஊர்ப் பிள்ளைகளை சொந்தப் பிள்ளைகளாகவும் நினைச்சீங்களோ.. அன்றைக்கே நீங்க எனக்கு அப்பா இல்லை. ரெண்டிலெ ஒண்ணு தெரிஞ்சாகணும். அப்பா... உங்களைத்தான்... டால்ஸ் : நான் அப்பா இல்லேன்னு சொல்லிட்டியே... பிறகு ஏண்டா அப்பான்னு கூப்படறே? உன் அம்மாவுக்குத்தான் நரம்புத் தளர்ச்சின்னு நினைச்சேன்... இப்போ உனக்கும் இருக்குன்னு நினைக்கிறேன். லியோ : எனக்கு நரம்புத் தளர்ச்சி இருந்திருந்தா இன் னேரம் உங்களைக் கழுத்தை நெறிச்சி கொன்னிருப் பேன்- அம்மாவைத் துரத்துன உங்களைக் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளி இருப்பேன். டால்ஸ் : நாட்டிலே அவனவன் அநியாயக்காரனையும் ஏகபோகவாதியையும் அடிச்சு நொறுக்கி... அந்தப் புரட்சியிலே புதிய சமுதாயத்தை அமைக்கணுங்க றான். நீ, ஏலாத கிழவனை பெத்த அப்பனையே அடிச்சு நொறுக்குவேன்னு சொல்றே! லியோ- நீ தாண்டா உண்மையான புரட்சிவாதி!