பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 + லியோ டால்ஸ்டாய் லியோ : இப்படியே பேசிக்கிட்டுப் போனா... (சற்று வேகமாக.) சோன்யா ; டேய்... அதை அடிச்சுக் கிடிச்சு தொலைச் சுடாத... என்னால தாங்க முடியாது.டா... லியோ : சும்மா இரும்மா... இந்த மனுஷனை என்ன பண்ணுனாலும் தகும். கொலைகூட பண்ணலாம். (குடும்ப டாக்டர் (Ghasha) பதறிக்கொண்டு வருகிறார்.) டால்ஸ் ; டேய் லியோ, என்னையா கொலை பண்ணப் போறே... நான் உன்னை தொட்டிலிலே போட்டு ஆட்டும்போது சந்தோஷமா தலைகுனிந்தேன். பிறகு தோளிலே தூக்கி வைக்கிறதுக்காக சந்தோஷம் தாங்காமல் தலைகுனிஞ்சேன். இப்போ தலைக்கு மேலே தறிகெட்டு வந்ததுக்காக மீண்டும் தலைகுனியு றேன். மீண்டும் தலைகுனியறேன். கடவுளே! எனக்கு எப்போ அழைப்பு அனுப்பப் போறே? இனிமேல் நான் இருக்கிறது பாவம்! நீ என்னை இருக்க அனுமதிச் சால் நீயும் பாவிதான். பாவிதான் (அழுகிறார்.) லியோ : இப்ப ஏன் அழறீங்க? டால்ஸ் : நான் எனக்காக அழலேடா... உனக்காக அழ றேன். நீ எதிர்காலத்துலே அழப்போறியேன்னு நினைச்சு இப்பவே அழறேன். டால்ஸ்டாயோட இளைய மகன் லியோ.. அந்த மேதையைக் கொலை பண்ணப் போனானாம்னு வரலாறு சொல்லப் போகிறதேன்னு பெத்த பாசம் தாங்க முடியாம