பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 53 அழறேண்டா... போடா... வரலாறுன்னு ஒண்னு இருக் கிறதை மறந்துடாதே! லியோ : எங்களுக்கு வரலாறு தேவையில்லை. உங்க ளோட டயரியும் நீங்க எழுதின எல்லாம் எங்களுக்கு வேணும். டால்ஸ் : அதுதாண்டா என் வரலாறு... அதைத் தாண்டா திருப்பியும் கேக்கறே. சோன்யா : அந்த உயிலைப் பற்றியும் கேளுடா... லியோ : உயிலை எங்க கண்ணுமுன்னாலேயே கிழிச்சு எறியனும். டால்ஸ் : என் உயிரைக் கிழிச்சாலும் கிழிப்பேனே தவிர உயிலைக் கிழிக்கமாட்டேன். சோன்யா : எல்லாம் அந்த செர்ட்கோவாலே வந்தவினை. அவனை நார் நாராய் கிழக்காட்டா என் மனசு ஆறாது! பாவிப்பயல்! நாசமாப் போற பயல் போக்கிரிப்பய! என் குடியைக் கெடுக்க வந்துட்டானே! (தலையில் அடித்துக் கொள்கிறாள்) காஷா : (சோர்வாக அமர்ந்திருக்கும் டால்ஸ்டாயை ஸ்டெதாஸ்கோப்பை வைத்துப் பார்க்கிறார்) மேடம் இவருக்கு பிரஷர் ஏறிக்கிட்டே போவுது. தயவுசெய்து பேச்சை நிறுத்துங்க. இல்லேன்னா... அவரு ஒரேயடி யாய் பேச்சை நிறுத்தவேண்டியது வரும். சோன்யா : நீயும் சரியான கூட்டுக்கள்ளன்யா... ஏய்யா, நான் தலையில நோவும்படியா அடிச்சுக்கிட்டது