பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - லியோ டால்ஸ்டாய் பெரிசாத் தெரியலே. அவரோட பிரஷர்தான் தெரியுதா? உன் மருந்தாலேயே என் புருஷனுக்கு நோய் வந்துட்டுது. நீ பேசினதாலேயே என் புருஷனுக்கு மூளை கலங்கிட்டுது... டால்ஸ் : சோன்யா, நான் உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்ட பாவி! இந்தப் பாவிக்கு தண்டனை கொடு. அந்த அப்பாவியை அப்படிப் பேசாதே! சோன்யா : இதுவா அப்பாவி? இது சரியான நரி! மருந்தைப்பற்றி தெரியாமலே மண்டைக் கணம் கொண்ட மனுஷன்! டாக்டராம் பொல்லாத டாக்டர்... டால்ஸ் : உன்கிட்டே பேசி பிரயோஜனம் இல்லே. நான் இப்போ சொல்றதுதான் முடிவாச் சொல்றது. ஒன்று. செர்ட்கோவை இனிமேல் இந்த வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லிடறேன். இரண்டாவது, அந்த பாழாப்போன டயரியை உன்கிட்டேயே தந்துடறேன். மூணாவது, நீ உண்மையிலேயே நல்லவள்... அதனாலே உன்மீது இப்பவும் நான் வைத்திருக்கிற அன்பை உலகுக்குத் தெரியப்படுத்த ஒரு கட்டுரை எழுதித் தந்துவிடுகிறேன். இந்த மூணுக்கும் நீ சம்மதிச்சா நீயும் நம் மகனும். மன்னிக்கணும் உன் மகனும் வெளியே போங்க... சமமதிக்கலேன்னா இங்கேயே இருங்க... நான் போயிடறேன்! சோன்யா : அந்த உயிலு? டால்ஸ் : அது என் உயிர். இந்த உயிரோட வேணும்னா அந்த உயிலையும் எடுத்துக்க.