பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் - 55 சோன்யா : வாடா, இப்ப போவோம். அப்பறமா பேசிக் கலாம். (சோன்யாவுடன் லியோவும் போகிறான்) காஷா ; லியோ, என்னை உங்கள் மனைவி மேற்கொண்டு எதுவும் பேசிடப் போறாங்கன்னு பயந்து நீங்க இப்படி சலுகை கொடுக்கலாமா? உறுதிமொழி கொடுக்கக் கூடாதுன்னு உபதேசம் செய்யும் நீங்க உறுதி கொடுக்கலாமா? என் சுயமரியாதையைக் காப்பாற்ற உங்கள் மரியாதையைக் காற்றில் விடலாமா? உங்களுக்கு நான் எப்படி பிரதி உதவி செய்றதுன்னே புரியலே! டால்ஸ் : நான் புரிய வைக்கிறேன் செய்வியா? காஷா : என்ன வேணும்னாலும் செய்யத் தயாரா இருக் கேன். டால்ஸ் : கொஞ்சம் விஷத்தைக் கொடு. காஷா : அய்யோ... என் இயேசுவுக்கா இந்த கதி? என் புத்தருக்கா இந்த நிலைமை? என் நபிகளுக்கா இந்த தண்டனை? (செர்ட்கோவ் வருகிறார்) டால்ஸ் : வா செர்ட்கோவ், வணக்கம். செர்ட் : குருவே. நீங்க வணக்கம் சொல்றதைப் பார்த்தா... டால்ஸ் : நெருக்கமான நண்பர்கள் வணக்கம் சொல்ல மாட்டாங்கன்னு சொன்ன அதே வாயாலேதான் வணக்கம் சொன்னேன்!