பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 + லியோ டால்ஸ்டாய் செர்ட் : அந்நியோன்யமாக இருந்த என்னை. அந்நிய னாய் நினைச்சுட்டீங்களா? டால்ஸ் : நினைக்கலே... நினைக்க வச்சுட்டாங்க! செர்ட் : எனக்கு ஒன்றும் புரியமாட்டேங்குது! டால்ஸ் : எனக்காக வாழ்நாளையே அர்ப்பணிச்ச என் மாணவனை, என் படைப்புகளில் ஒரு காசுகூட எடுக்காமல் என்னைப் பரவலாக்கிய என் நண்பனை, இயல்பிலேயே தன்மானம் உள்ளவனாய் இருந் தாலும், எனக்காக எத்தனை பேருடைய இழிமொழி களையும் சுமந்த என் மகனை... நான் இனிமேல் பார்க்கமாட்டேன்னு வாக்குக் கொடுத்துட்டேன்! செர்ட் : உங்களை நான் பார்க்காமலிருக்க முடியாது! என்னைத் தடுக்க யாராலும் முடியாது... கடவுளே சொன்னாலும் கேட்க மாட்டேன்! டால்ஸ் : செர்ட்கோவ், சொன்னபடி வாழாத இந்தக் கிழவன் எழுதினபடி வாழ்கிறவன் நீ. இட்டதைத் தட்டாமல் செய்யும் கர்மயோகி நீ... அப்பவும் இப்பவும்... எனக்கு நாக்கு வரமாட்டேங்குது... காஷா : செர்ட்கோவ், அவருக்கு ஏதாவது ஆயிடப் போவுது. அவருக்காகவாவது... டால்ஸ் : ஆமாம் செர்ட்கோவ், எனக்காக இந்தக் கிழவன் கொடுத்த வாக்கை நிறைவேற்ற உதவுவியா?