பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 59 டால்ஸ் : இன்னும் புரிஞ்சுக்கலே! என் இளமை வெறிக்கு. தன் இஷ்டத்துக்கு விரோதமாகக் கூட எனக்கு இன்பம் கொடுத்தவள். நான் அவளை ஏமாற்றலாமா? காஷா : அதுக்கு பைத்தியம் பிடிச்சிட்டுதுன்னு நினைக் கிறேன். கன்னத்துல அறையாமல் நீங்க என்ன லியோ... இப்போ நீங்க பண்ண அக்ரமத்துக்கு நான் அனுபவிக்கிறேன்... இந்த வயசிலயா. இப்படி யெல்லாம்... டால்ஸ் : காஷா, டாக்டரா இருந்தும் மனோதத்துவம் தெரியாம பேசlங்களே! அவளுக்குத் தேவை செக்ஸ் அல்ல. நான் அவளுக்கே சொந்தம் என்பதை காட்டத் துடிக்கும் ஒரு அடிமன உளைச்சல். நான் இன்னும் அவளோடு இருக்கிறேன் என்பதை அறியத் துடிக்கும் உளைச்சல். என் அந்தரங்கத்தை அவள் ஒருத்தி மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும் என்ற அன்புரிமையை சந்தேக மனதுக்குக் காட்ட ஒரு சாட்சி... அவ்வளவுதான். மற்றபடி நாங்க ரெண்டு பேருமே மரக்கட்டைதான். செக்ஸ் ஒரு பிரச்சினை யில்லை. வெறுமையில் தோன்றும் அச்சம், தாயன்பைப் பெறாத வெறுமை இவையெல்லாம் செக்ஸ் பிரச்சினையாக வரும் என்பது டாக்டரான உங்களுக்குத் தெரியாதா? அவள் பிரச்சினையை அனுதாபத்தோட பார்க்கணும். காஷா : நான் அனுதாபத்தோட பார்க்கலாம். ஆனால் உடம்பு பார்க்குமா? எதுக்கும் ஒரு வயசிருக்கு... ஒரு வரம்பிருக்கு செக்ஸுக்கும்.