பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 லியோ டால்ஸ்டாய் இருவர் பேச்சையும் கேட்டவாறு அலெக்ஸாண்ட்ரியா வருகிறாள்) அலெக்ஸ் : என்னது ரெண்டு பேரும் கிசுகிசு பேகறிங்க, செக்ஸைப்பற்றி இந்த வயசிலே உங்களுக்கென்ன பேச்சு. ம் என்ன... பேசினீங்க? காஷா : அதுவந்து... அதுவந்து... அலெக்ஸ் : நீங்க ரெண்டு பேரும் முழிக்கிற முழியைப் பார்த்தா-ஏதோ நடந்திருக்கு... சொல்லுங்க. டால்ஸ் : அலெக்ஸாண்ட்ரியா, முதல் உயிலில் உன்னை மட்டும் டிரஸ்டியாய் போட்டேன். இப்பொ உன் அக்காள் டான்யாவையும் (Tanya) கோடிரஸ்டியா போட்டிருக்கேன். உனக்கு வருத்த மில்லையே? அலெக்ஸ் : நான் லியோ டால்ஸ்டாயின் மகள் என் கிறதைவிட மாணவி என்பதில் பெருமைப்படுபவள். சும்மா வேணும்னு பேச்சை மாத்தாதீங்க. காஷா : சும்மா நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போகாதே! அலெக்ஸ் : உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? டால்ஸ் : காஷா, அலெக்ஸாண்ட்ரியாவிடம் சொல்லித் தான் ஆக வேண்டும். மகளே, நேற்று இரவு உனக்கு ஒரு தங்கையோ தம்பியோ பிறக்கறதுக்கு நானும் உன் அம்மாவும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தோம்... அவ்வளவுதான். இதுக்கு மேலே எதுவும் கேட்காதே. (சிந்தனையோடு ஒரமாக சென்றவள், டாக்டரை நெருங்கி)