பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 61 அலெக்ஸ் : என்னப்பா இது... நீங்களுமா? டாக்டர், எனக்கு ஒண்ணும் புரியல. என் அம்மாவால் எங்கப்பாவுக்கு ஏதோ தீங்கு நேரிடப் போவுது. இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும். டால்ஸ் : நானே ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இனிமேல் இந்த வீட்டிலே என்னாலே இருக்க முடியாது. இன்னும் அவள் என்னை வேவு பாக்கிறதை விடலே. ராத்திரியிலேகூட திடீர் திடீர்னு வந்து எட்டிப் பார்க்கிறாள். உயிலு உயிலுன்னு உயிரை விடறா... என்னைக் கைதியா வைக்கணும்னு நினைக்கிறா... அதனாலே பலதடவை ஒத்திப் போட்ட என் பிரயாணத்தை நாளை துவங்குகிறேன், காஷாநீங்களும் வர்றிங்களா? எங்கேயாவது ஓடி ஒளியனும் வர்றிங்களா? காஷா : அதைவிட எனக்கு என்ன வேலை. அலெக்ஸ் : நானும் வரேம்பா. டால்ஸ் : வேண்டாம்மா. நான் போனது தெரிஞ்சதும் உன் அம்மாவுக்கு பைத்தியமே பிடிச்சாலும் பிடிச்சுடும். அவள் நல்லவள். கெட்டவள் அல்ல. நல்லவளோ கெட்டவளோ... உனக்குத் தாய். காஷா, தயாரா இருங்க. சரியா காலையிலே நாலு மணிக்கு புறப்படறோம். அலெக்ஸாண்ட்ரியா, செர்ட்கோவிடம் தெரியப்படுத்திடு. மகன் ஸெர்ஜி (Sergi) கிட்ட சொல்லிடு. சரியா 4 மணி. அலெக்ஸ் : அப்பா! (விம்மி அழுகிறாள்.)