பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 67 ஓஸோ : (வந்து) யார் நீங்க? காஷா : இவரு வந்து... இவரு வந்து... டால்ஸ் : நீங்க சும்மா இருங்க. தம்பி, நீங்க யாரு? ஓஸோ : நான் ஸ்டேஷன் மாஸ்டர் இவான் இவநோவிச் 9G som 686ör” (Ivan Ivanovich Ozolin). @țbģ5 அஷ்டபோவா (Astapova) ஸ்டேஷனுக்கு இன்சார்ஜ். நீங்க யாரு? காஷா : இவரு வந்து இவர்தான்... மிகப் பெரிய... டால்ஸ் : மிகப்பெரிய 120ஆம் நெம்பர் ரயிலின் பிரயாணி. இது மட்டும் தெரிந்தால் போதும் (இருமுகிறார்.) காஷா : ஸ்டேஷன் மாஸ்டர், இவர்தான் லியோ டால்ஸ் டாய்? பனில நனைஞ்சு இப்படி ஆயிட்டாரு. இவருக்கு தங்க இடம் கிடைக்குமா? இன்றைக்கு மட்டும்தான். ஓஸோ : என்ன! போரும் சமாதானமும் எழுதின புனித டால்ஸ்டாயா? பைபிளுக்கே புதிய அர்த்தம் கொடுத்து வாழ்க்கையின் அனர்த்தத்தை அர்த்தப்படுத்திய என் அபிமான டால்ஸ்டாயா? டாக்டர்-என் வீட்டுக்குப் போகலாம். லியோ பிரபு எழுந்திருங்க... எழுந்திருங்க பிரபு. படுத்துக் கிடந்த பாமர மக்களை எழுப்பிய என் குருவே நீங்க படுக்கக் கூடாது. எழுந்திருங்க. (அவரைத் தாங்கி எழுப்ப முயல்கிறான்)