பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 9 இடம் : ஸ்டேஷன்மாஸ்டர் வீடு. நேரம் : நள்ளிரவு. பாத்திரங்கள் : டால்ஸ்டாய்- டாக்டர் காஷாஸ்டேஷன் மாஸ்டர் ஓஸோலின்- அலெக்ஸாண்ட்ரியாசெர்ட்கோவ்- சோன்யா. (டால்ஸ்டாய் மரணப்படுக்கையில் துடித்துக்கொண் டிருக்கிறார். டாக்டரும், ஸ்டேஷன்மாஸ்டரும் கவலையுடன் அமர்ந்திருக்கிறார்கள். 'ஹ-றோ u_m sociol_mui (Hurrah Tolstoy) i Irsveivu_mui surTyps.' என்ற சத்தம் விண்ணதிரக் கேட்கிறது, டால்ஸ் : காஷா, என்ன சத்தம். ஒருவேளை எனக்குத் தான் அப்படிக் கேட்கிறதோ... காஷா : இல்லை லியோ, லட்சக்கணக்கான பாமர மக்கள் உங்களைப் பார்க்கத் துடிக்கிறாங்க... போலீஸ்காரர் களாலே அவங்களைக் கட்டுப்படுத்த முடியலே. பல நாடுகளிலிருந்து பத்திரிகைக்காரர்கள் வேறு வந்திருக்காங்க. டால்ஸ் : எப்போ அவங்களுக்கு க்ளைமேக்ஸ் நியூஸ் கிடைக்கும் காஷா? ஓஸோ ; லியோ... நீங்க அப்படியெல்லாம் பேசக்கூடாது. டால்ஸ் : நான் மரணத்துக்குப் பயப்படலே ஓஸோலின்... என் சின்னப் பையனும் பெரிய மகளும் செத்தபோது