பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் - 71 குடியானவர்களுக்கு தானியக் களஞ்சியம் வைக்கிறது கேள்விப்பட்டு பனந் தர்றேன்னு சொல்லியிருக்கார். கடிதம் போட்டுடு பணத்தை சேரவேண்டிய இடத்தில் சேர்த்துடு. (இருமுகிறார்) நான் அந்தப் பணத்தைப் பார்க்குமுன்னால் போக வேண்டிய இடத்துக்குப் போயிடுவேன். காஷா ; லியோ, எப்படியாவது ஊருக்குப் போயிடலாம். டால்ஸ் : இதோ இந்த ஒஸோலின்... நான் பெறாமல் பெற்ற என் மகன். என் மகன் வீட்டில்தான் நான் இருக்கிறேன். ஓஸோ : பிரபு... என்னை ஒரு பொருட்டாய் நினைத்து. டால்ஸ் : ஒஸோலின்- க்ரிகோறி ஸ்கோவறாடா (Grigory Skovorada) எழுதின கவிதை தெரியுமா...? ‘வாழ்வுக்கு வேண்டியவை எல்லாம் கஷ்டமில் லாமல் கிடைக்கும். கஷ்டமானவை எல்லாம் வாழ்வுக்கு வேண்டியதுமில்லை." “All that is needed is not difficult and All that is difficult is not needed.” இந்தக் கவிதைக்கு இலக்கணம் நீ! டால்ஸ் டாயில் இந்த ஓஸோலின் பெயர் தெரிவதைவிட. ஒஸோலினால் டால்ஸ்டாய் பெயர் தெரியணும். (இருமுகிறார்) செர்ட்கோவ் கடவுள் வணக்கம் படிக்கிறாயா? நான் சொல்றதை எழுதிக்கிறாயா...? என் சோன்யா எங்கே இருக்கிறாள்...?