பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 + லியோ டால்ஸ்டாய் காஷா : (அலெக்ஸாண்ட்ரியாவிடம் இரகசியமாக) அம்மா ரயில்வே கம்பார்ட்மெண்டில் இருக்கிறதை சொல்லிடாதம்மா. அப்பா உணர்ச்சிவசப்பட்டால் அவர் உயிரும் உணர்ச்சிவசப்படும். டால்ஸ் : என்ன இரகசியம்? காஷா : ஒண்னுமில்லெ... பேசாம இருங்க. செர்ட் : நெஞ்சைத் தடவி விடட்டுமா? அலெக்ஸ் : என் மடியிலே தலை வச்சிக்கிறீங்களா அப்பா! ஓஸோ : குடிக்க ஏதாவது வேணுமா பிரபு? டால்ஸ் : (வெறுமையாக) லியோ டால்ஸ்டாய்க்கு கால் பிடிக்க காஷா. உடம்பைப் பிடிக்க ஓஸோலின்... மடியில் கிடத்த மகள். மடிவதைப் பார்க்க விரும்பாத செர்ட்கோவ். என்னைத் திருத்துவதற்கு மதகுரு. போட்டோ கிராபர்கள்... பத்திரிகையாளர்கள்... (கோபமாக) இந்த ஒரு டால்ஸ்டாய்க்கு இத்தனை பேரா? இந்த உலகில் இலட்சோப இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். உண்ண உணவில்லாமல். உடுக்க உடையில்லாமல். இந்த ஒரு டால்ஸ்டாய்தான் உங்க ளுக்கு ஒசத்தியா? இவன்மட்டும்தான் உங்களுக்கு முக்கியமா? (தணிவாக) தயவுசெய்து நான் சொல்றதைக் கேளுங்க... என்னை மத முறைப்படி அடக்கம் செய்யக்கூடாது. சமாதியை எழுப்பக்கூடாது. என்