பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வகுப்புரிமைப் போராட்டம் இந்துவும், மித்திரனும், கல்கியும், விகடனுங் கூட இந்த வெற்றிகுறித்துப் பாராட்டி எழுத முன்வரவில்லையெனில், அவர்களது திகைப்பு- குற்றம் செய்த உள்ளம் குறுகுறுக்குந் தன்மை- தெளிவாகாமற் போகாது. அவர்களது 'தந்திரமாகிய திறமை' பொது மக்களின் ஆத்திரத்தைக் கிளறிவிடாமல் தப்பித் துக்கொள்ள உதவுகிறது. உதவட்டும், வரவேற் கிறோம். ஆனால், அதே திறமைதான்,-சூழ்ச்சி யோடு கூடிய, சுயநலப் பேராசை எண்ணந்தான் அவர்களை-பொதுமக்களின் நிரந்தர வெறுப்புக்கு ஆளாக்கி, வருங்கால வாழ்வையே இழக்கச் செய் யக் காரணமாகும் என்பதை அவர்கள் உணர்ந்த தாகத் தெரியவில்லை. எப்படி உணரமுடியும், அந்த 'மேதை'க ளால்? அவர்கள்தான், பரம்பரை பரம்பரை யாகப் பலநூறு ஆண்டுகளாகத் தந்திர மந்திரத்தி னாலேயே, சோம்பேறிச் சுகவாழ்வைத் தேடிக் கொண்டவர்களாயிற்றே ? பிறர் கஷ்டம் உண ராத உயர்சாதிக்காரராயிற்றே? அப்படிப்பட்ட வர்கள், மக்களாட்சிக் காலமாகிய இப்பகுத்தறிவு நூற்றாண்டில், 'அதே திறமை,' தான் தாம் வீழக் காரணமாகிவிடும் என்பதை எங்கே உணரப் போகிறார்கள்? அந்தத் தெளிவு எப்படிப் பிறக்கும் அகம்பாவப் பிறவிகளுக்கு ? ஆதிக்கவாதிகளின் திறமை', வழக்குமன்றத்தை நாடி, சமூக நீதிக்கு வழிவகுத்த கம்யூனல் ஜி. ஒ. இந்திய அரசியல் சட்டப்படிக் கல்வித்துறையில் செல்லத்தக்க தல்ல" என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பைத்தேடித் தந்தவுடன், பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள ஏமாற்றமும் அவநம்பிக்கையும் சொல்லுந் தரத் தது அன்று.