பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்ப்புக்குப்பின் ஜூலை 27-க்குப் பின் ! உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கிய நாள் 1950 ஜூலை 27. அன்று தோன்றிய அதிர்ச்சி, நாட்டு மக்களின் உள்ளங்களிலே ஏற் பட்ட கொதிப்பு, பிற்படுத்தப்பட்டவர்களின் நெஞ்சிலே நிறைந்த சோகம், மாணவர்களின் மனத்திலே பொங்கிய குமுறல், இன்னும் ஆற வில்லை, அண்மையில் ஆறவும் வழியில்லை. இன்றைய தமிழகம் குமுறும் எரிமலை யாக இருக் கிறது. தென்னாட்டுப் பொது மக்களின் உரிமை உணர்ச்சியும், எழுச்சியும் ஓரளவேனும், ஆள வந்தோரால் மதிக்கப்படுகிறது என்பதற்குச் சில அறிகுறிகள் காணப்படுவதாலேயே, குமுறும் எரி மலை புகைந்தபடி உள்ளது, கனல் கக்கவில்லை ; புரட்சிக் குழம்பு நாட்டில் பரவவில்லை, ஆதிக்க வெறியர்களை ஆபத்து இன்னும் அணைக்கவில்லை.

கல் ஆனால், இந்த நிலைக்குக் காரணமான தீர்ப் பைப் பெறுவதற்றுத் தான் எவ்வளவு முயற்சி, என்னபாடு ? அடடா, எவ்வளவு பெரிய மனிதர் களின் - அதிமேதாவிகளின் புத்திச்செலவு? சட் டத்தின்படி செரியென்றே ஒப்புக்கொள்ளினும், நியாயமல்லாத, சமூக நிலைமைகளின்படி வித்துறையில் கம்யூனல் ஜி. ஒ. செல்லாது என்ற இந்தத் தீர்ப்பைப் பெறத்தான இவ்வளவு காலமும் முயற்சியும் செலவாகவேண்டும்? என்ன பலன் கண்டார்கள் ? மலையைக் கல்லி எலியை யாவது பிடித்திருக்கிறார்களா? என்றால், இருந்திருக்கவேண்டிய வளையில் பாம்பல்லவா- படமெடுத்துச் சீறுவதைக் காண்கின்றனர்! எலி பொது மக்களோ, பிற்படுத்தப் பட்டவர்கள் எல்லோரும், சாதி, மதம், கட்சி முதலிய வேறு பாடுகள் எதையும் விலக்கி, சமூக நீதியை நிலை