பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்புரிமைப் போராட்டம் நாட்ட, உறுதிகொண்டு ஒன்றுபட்டுவிட்டனர். மாணவர்களோ எத்தகைய விலைகொடுத்தும், சமூக நீதியை நிலைநாட்டத் தீர்மானித்துவிட்டனர். வாலிபர்கள் போருக்குத் தயாராகிவிட்டனர். இந்நிலையைக் கண்டபின்பே, அரசியல் சட்டத் தையே மாற்றியமைக்கவேண்டி நேரிட்டாலும், மாற்றியமைத்தேனும், இன்னும் சிறந்த வடிவி லேயே சமூகநீதி நிலைநாட்டப்பட்டுத் தீருமே தவிர, சரியவிடப்படமாட்டாது என்ற உறுதி பிறக்கின் றது நமக்கு. 2. வகுப்பு நீதி வளர்ந்த விதம் இத்தகு சிறப்பும், முக்கியத்துவமும் அடைந் துள்ள சமூக நீதி உத்தரவாகிய கம்யூனல் ஜி. ஒ. குறித்துப் பொதுமக்களிலே பலர் உண்மை வர லாற்றை அறிய மாட்டார்கள். பார்ப்பன ரல்லாத பெருங் குடிமக்களோ நூற் றுக்குத் தொண்ணூறு பேரும் தற்குறிகள். மிகச்சிலரே படித்தவர்கள். அவர்களுள்ளும் பலர், தானுண்டு தன் வாழ்வுண்டு என்று வாய் மூடி அடங்கிக்கிடப்பவர்கள். அப்படி அடங்காவிடில், ஆதிக்கவாதிகளால், தொல்லைக்கு ஆளாக நேரிடும் என்பதையும் கண்டறிந்தவர்கள், ஆதிக்கவாதிக ளுக்கு மாறாக எப்படி வாய் திறந்து உண்மையை உரைக்க முன்வருவர்? அன்றியும், அரசாங்க உத்தியோகத் துறையி லும், உயர்தர விஞ்ஞானக் கல்வி நிலையங்கள் ஒன் றிரண்டிலும் மட்டுமே, கைக்கொள்ளப்பட்டு வந்த சமூக நீதித்திட்டம் குறித்து, மிகப் பெரும்பான் மையும் தற்குறிகளைக் கொண்ட சமூகம் எப்படி உணரமுடியும்? வண்டி இழுப்பவர்கட்கும், வயல் வகுப்பு நீதி வளர்ந்த விதம்