பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்புரிமைப் போராட்டம் 1. தீர்ப்புக்குப்பின் சில உரையாடல்கள்:- கல்லூரி மாணவர்கள் சிலர்:- “டேய், கிட்டு, நம்மளவா எதை எடுத்தாலும் ஜெயந்தாண்டா, பார்த்தியோன்னோ, கம்யூனல் ஜி. ஓ. மண்ணைக் கவ்விண்டு போயிட்டுது

ஆமாண்டா, ரகு, அதான் அந்தப் பசங் கள்ளா, ஒரே ஆத்திரமா, கும்பலா கூடிக்கூடிப் பேசின்டிருக்கா!' " நோக்கு, ஏண்டா, அதுபற்றிக் கவலை. அந்தப் பசங்களை யெல்லாம் நம்ம பிரின்ஸ்பால் நோட் பண்ணிக்காமலா இருப்பார்? அதிருக்கட் டும், வர்ற வருஷத்திலேருந்து, நம்மப் பிடிச்ச கலி ஒழிஞ்சுது. ஜாம், ஜாம்னு மெடிக்கல், இன் ஜினீய ரிங் காலேஜ்லே யெல்லாம், நாமே சேர்ந்துடலாம்." '"அடுத்த வருஷம் இருக்கட்டுண்டா, இப்பவே நம்ம ஃபிரண்ட்ஸ் (Friends) எல்லாம் நம்மையே ஒரு மாதிரி-பார்க்கிறாளேடா? "அந்தப் பசங்க இப்ப அப்படித்தாண்டா, கோபமா இருப்பா, நாலு நாள் ஆனா, அப்புறம் அதெல்லாம் அடங்கிடும். நீ ஏண்டா பயப்படுறே? வாடா, ஐஸ்கிரீம் சாப்பிட்டு வரலாம்."