பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வகுப்புரிமைப் போராட்டம் அரசாங்க அலுவலகத்தில், உத்தியோகஸ்தர்கள் இருவர்:- "என்ன ஓய், வேம்புவா ? வாரும், ஒரே குஷீ தான் போலே இருக்கு! நம்மளவா, வெகுநாள் மனோபீஷ்டம் நிறைவேறிப் போச்சோல்லியோ?" 66 ! ஆமாம், ஆமாம். சாம்பு சாஸ்திரிகளே ! அவா, அதோட விட்டுடுவாண்ணு தோணல்லியே, அப்பீலுக்குப் போவாப்போல இருக்கே!" "போனாதான், என்னங் காணும் ? நம்ம அல் லாடியின் திறமை, சாமர்த்தியம், எல்லாம் எங்கே போயிடும் ஓய்! இப்பதான் அல்லாடியின் புத்தி தீட்சண்யத்தை தேசமே தெரிஞ்சுடப் போகுதுங் காணும்." "அதிருக்கட்டும். இப்ப நம்மள வாளை, ஊரெல் லாம் தூஷித்துப் பேசறதை, நெனச்சாத்தான், கொஞ்சம், என்னமோபோல இருக்கு ஓய் !" "என்னங்காணும் வேம்பு! அதைப் பார்த்தே அசந்துட்டீர் போல இருக்கே? இப்படிப்பட்ட நேரத்திலே மனோ தைரியத்தை இழந்துடுவளோ ? அவாள்ளாம். இப்ப, அப்படித்தான் ஆத்திரமா கொதிச்சிண்டிருப்பா. இப்பத்தான் நாம கொஞ் சம் ஜாக்கிரதையா, ஏதோ, ஒண்ணும் அறியா தவா மாதிரி, சந்தோஷத்தை வெளிக்குக் காட் டாம நடந்துக்கணும். "அதென்னமோ, அவன்களைப் பார்த்தா, காந்தி செத்தப்ப முகத்தை வைச்சிண்டிருந் தான்களே, அப்படீண்ணா இருக்கானுங்க." வருத்தம், இருக்காதோ அவாளுக்கு. இது ஒண்ணுதான் அவர், வாழி வழியா இருந்தது, அதுவும் போச்சுண்ணா, ஐயோடாண்ணு குந்த தீர்ப்புக்குப்பின்