பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 வேண்டியதுதானே? இருந்தாலும், காந்தி செத் தப்ப மஹாராஷ்டிரத்திலே யெல்லாம் நடந்து கிட்டான்களே, ஆத்திரமா, அப்படி நடந்துக்க மாட்டாங்காணும் இவா. தென்னாட்டுக்காரா ளோல்லியோ, நாசகாரியத்திலே பிரவேசிச்சுட மாட்டாங்காணும்!" "என்ன இருந்தாலும், ஆத்திரம் வந்தா? அப்புறம் நம்ம கதி " 66 அதாங்காணும், இப்ப ஜாக்கிரதையா, இருந்துட்டம்ணா, அப்புறம் நம்மபாடு வேட்டை தான். கொஞ்ச நாளிலே அதுங்கள்ளியே சிலது, இதையெல்லாம் மறந்துட்டு வாலைக் குழைச்சிண்டு, நம்ம பின்னாலியே வரும், ஓய். அதுவரையிலே தான், நாம நிஷ்காமிய கருமி மாதிரி நடந்துக் கணும் ஓய். அப்புறம், நம்ம அல்லாடிக்குக் கோயிலே கட்டினா கூட, அவாளே பொருளுதவி பண்ணுவாங்காணும்.” "சரி, சரி, மணி 4 ஆச்சு, வாரும் ஆத்துக்குப் புறப்படலாம்." பத்திரிகாலயத்தில், ஆசிரியரும் உதவி ஆசிரியரும் :- "என்ன, மிஸ்டர் சீனு! இது ரொம்ப ரொம் பத் தொல்லையான்னா போச்சு. கம்யூனம் ஜி. ஓ., தீர்ப்பு கிடைச் சதிலேருந்து ஊரெல்லாம் ஒரே ரகளையான்னா இருக்கு சட்டப்படி செல்லா துண்ணு ஆமாம், எடிட்டர் சார்! நியூஸ் வேறே, அதைப்பத்தியே ஏராளமா வந்துண்டே இருக்கு. நாம்தான், இருட்டடிப்புச் செய்தா குணுமே ? மற்றவா பத்திரிக்கையிலே மட்டும் கொஞ்சமாவது