பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வசந்தம் மலர்ந்தது செல்லம் பண்டிதர் விழித்தபடி நின்ருர், அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் எசமான்?’ என்று விசாரித் தார். "பொன்னம்மா போயிட்டா!' என்று புலம்பினர். அவர் கண்கள் நீர் சிந்தின. அவர் பார்வை எல்லேயற்ற வெளியிலே திரித்தது. - - அப்பொழுது விடிந்து கொஞ்ச நேரமாகிவிட்டது. கீழ் வானிலே செங்கதிரோன் தொடங்கிய யாத்திரை மேலே தொடர்ந்துகொண்டிருந்தது. செங்குளம் ஊரைக் கவிந்திருந்த மூடுபனி விலகிவிட்டது. 'சூழ்ந்திருந்த சுவடே இல்லை. தரையில் தான் புல் நுனிகளி லும் சிறு செடிகளிலும் நீர்த்துளிகள் முத்து முத்தாக நின்றன. பண்ணையார் கண்களேத் துடைத்துக்கொண்டார். என் முலும் கண்களில் நீர் இல்லாமல் போகவில்லை!