பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் | 11 சொன்னால் அதை யாராவது நம்புவார்களா? ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா? தனம் இருந்தால் மாத்திரம் மனிதனுக்குக் கெளரவமே ஒழிய, பொருளில்லாதவனுக்குப் புகழும் இல்லை மதிப்புமில்லையே! அவன் உண்மையைச் சொன்ன போதி லும், அது பொய்யாகவே தோன்றுமே! விருத்தம்: சங்கராபாணம் வஸ் மறையவர்மணியே! நுங்கள்மதிப்பிலாத்தனங்கள் யாவும் & மறைந்தன வேணுமென்று மகலுமோ புகழும் பேரும்? நிறைவழா வரிய நீர்மை நீங்கிடாச் செல்வ மாகக் குறைவினி யுங்கட் குண்டோ கோதிலாக் குணத்தின் மேலோய் பிரபு தங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. உலகத் தில் யாவரும், தனவந்தர்களையே மதிக்கிறார்கள் என்பதும் ஏழைகளை இகழ்ந்து அவமதிக்கிறார்கள் என்பதும் முற்றும் நிஜமல்ல. ஒருவன் பரம தரித்திரனாய் இருந்த போதிலும் அவ னிடத்தில் நற்குண நல்லொழுக்கமும் நீதி நெறி வழுவாமல் நடக்கும் மனோதிடமும் இருக்குமாயின், ஜனங்கள் அவனை எவ்வளவோ பாராட்டிப் பெருமைப்படுத்துகிறார்கள். ஒரு தனிகனிடத்தில் நற்குணம் இல்லாவிட்டால், ஜனங்கள் வெளிக்கு அதைக் காட்டாமல் அவனை மேன்மைப்படுத்தின போதிலும், உள்ளுற அவனை இகழ்வதே உலக இயல்பு. ஆகையால், தங்கம் குப்பையில் கிடந்த போதிலும் அதன் அருமை பெருமை கள் ஒரு நாளும் அதற்கில்லாமல் போகா. எவரோ நன்றியற்ற சிலர் உங்களை மறந்த போதிலும், இந்த நகரத்தினர் பெரும் பாலரும் உங்களுடைய மேன்மையை நினைத்த வண்ணம் இருக்கின்றனர். ஸ்வாமி பிறருக்குக் கொடுக்கப் பொருள் இல்லையே என்று தாங்கள் இனிச் சிறிதும் கவலைப்பட வேண் டாம். இந்த அடிமைக்கு ஏராளமாக பொருள்கள் தேவைக்கு அதிகமாகக் குவிந்து கிடக்கின்றன. அவற்றைத் தங்களுக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். அவற்றை இனித் தங்கள் இச்சைப் படி உபயோகித்துக் கொள்ளலாம். தாங்கள் இதற்காகச் சிறிதும் வருந்த வேண்டாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/113&oldid=887332" இலிருந்து மீள்விக்கப்பட்டது