பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் மாத (தனக்குள்) ஆகா! என்ன மேன்மைக் குணம் கற் பாறையில் தாமரை பூத்ததைப் போலவும், ஆலகால விஷத்தைக் கொண்ட ஸர்ப்பத்தின் தலையில் மாணிக்கம் உண்டானது போலவும், ஈவிரக்கம் என்பதே இல்லாத தாஸியின் குலத்தில் இவ்விதமான உத்தமி வந்துதித்தது விந்தையிலும் விந்தையே! (உரக்க/ஹே! பெண்மணி வஸந்தஸேனை உன்னுடைய அழகிய மொழியைக் கேட்டுப் பரமானந்தம் அடைந்தேன்! இவ்வளவு தயை எவருக்கு உண்டாகும் நற்குணவதியாகிய நீ, நீடுழி இன்பம் அனுபவித்து வாழ அந்த ஈசுவரன் அனுக்கிரகிப் பானாக! மாதே நான் இதுவரையில் பிறருக்குக் கொடுத்தறிவேனே யொழிய எவரிடத்தும் வாங்கி அறியேன். எப்பொருளையும் நாம் நியாயமான வழியில் சம்பாதித்துச் செலவு செய்தல் வேண் டுமே ஒழிய அன்னியருடைய செல்வத்தை நாம் இப்படிக் கவரு தல் திருட்டாகும். ஆகா! நல்ல காரியம் செய்யச் சொல்லு கிறாய்! என்னிடத்தில் அந்தரங்க அபிமானம் வைத்தவளாய்க் காணப்படும் நீ எனக்கு இவ்விதமான தீங்கை நினைக்கலாமா? நீ எனக்கு உதவி செய்வதாய் வாயினால் சொன்ன அந்த அன்பான மொழியும், நினைத்த நல்ல நினைவுமே போதும். நான் அவற்றை அடைந்து தனிகனானதிலும் அதிகம் பெருமகிழ்ச்சி அடைந்தேன். வஸ் ஸ்வாமி என்னை அன்னியளாகப் பாவிக்கக் கூடாது! நான் சதா காலமும் இடைவிடாமல் தங்கள் உருவத்தையே என் மனதில் வைத்து அதையே தெய்வமாக மதித்து வழிபட்டுத் தங்களைப் பற்றி மனனஞ் செய்வதையே பேரின்பமாய் மதித்து வருகிறேன். தங்களைப் பார்த்துத் தங்கள் மேன்மையைப் பற்றி உணர்ந்த பின் இந்தச் சரீரத்தைத் தங்களுக்கென்றே அர்ப்பணம் செய்து விட்டேன். ஆகையால் என்னை அங்கீகரித்துத்தங்களுக்குப் பணி புரிபவளாய் வைத்துக் கொண்டு என்னை ஈடேற்ற வேண் டும். தங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம் தங்களிடத்தில் சென்ற மனது இனி வேறு யாரிடத்திலும் இந்த உயிரழிவதாய் இருந்தாலும் செல்லாது. என்னுடைய ஏராளமான செல்வத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/114&oldid=887334" இலிருந்து மீள்விக்கப்பட்டது