பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் வஸ பெற்றோரின் ஏழ்மையை குழந்தை எப்படி அறியப் போகிறது! கண்ணே அழாதே; உனக்குப் பொன் வண்டி தானே வேண்டும்? நான் வாங்கித் தருகிறேன். எங்க்ே ஒரு முத்தங் கொடு. குழ அம்மா! இந்தம்மாள் யார்? வஸ் : நான் உன் பிதாவின் மேன்மைக் குணமான ஐசுவரியத் தினால் விலைக்கு வாங்கப்பட்ட பணிப்பெண். கோம : குழந்தை இவர்களும் உன்னுடைய அம்மாள்தான். குழ நீ பொய் சொல்லுகிறாய். என்னுடைய அம்மாளாய் இருந்தால், அழகான இத்தனை ஆடையாபரணம் இருக்காதே! வஸ் ஆகா! நம்முடைய எஜமானர் செல்வாக்கில் இருந் ததை இவன் கண்டதில்லை அல்லவா! ஏழ்மை நிலைமையி லேயே பிறந்து வளர்ந்தவன். (தன்ஆபரணங்களை எல்லாம் கமுற்றி விடுகிறாள்) இப்பொழுது பார்த்தாயா என்னை? இப்பொழுது உனக்கு நான் அம்மாளைப் போல இருக்கிறேனா? இந்த ஆபரணங்களை நீ எடுத்துக் கொண்டு போய் பொன் வண்டி வாங்கிக் கொள். (அவனை மார்பில் அனைத்து முத்தமிட்டு ஆனந்தக் கண்ணி விடுகிறாள்) குழ நீதான் நகைகளைக் கொடுக்கிறதற்காக அழுகிறாயே! எனக்கு வேண்டாம் போ! வஸ் (கண்ணைத்துடைத்துக் கொண்டு) கண்ணே பாக்கி யமே! நான் அழவில்லை. நீ இவைகளை எடுத்துக் கொண்டு போய் பொன் வண்டி வாங்கிக் கொள். (நகைகளை வண்டியில் நிறப்புகிறாள்) - குழ நீ இப்பொழுது கொடுப்பாய்; திரும்பக் கேட்பாய்; எனக்கு வேண்டாம். வஸ நான் இனிமேல் கேட்கவே மாட்டேன். நிச்சயம். குழ இந்த நகைகளால் வண்டி எப்படிச் செய்கிறது என் னுடைய அம்மாள் கோபித்துக் கொள்வாள். எனக்கு வேண் டாம். நீயே எடுத்துக் கொள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/122&oldid=887351" இலிருந்து மீள்விக்கப்பட்டது