பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 121 வஸ அம்மாள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். இவை களைத் தட்டானிடம் விற்று விட்டுப் பொன் வாங்கி வண்டி செய்து கொள்ளலாம். எடுத்துக் கொண்டு போ. குழ சரி; அப்படியானால் எடுத்துக் கொண்டு போகட் டுமா? நீ அழ மாட்டாயே. அழுதால் எனக்கு வேண்டாம். வஸ ஆகா! பிதாவைப் போலப் பிறர் மனம் வருந்த சகி யாதவன். - கண்ணே நான் அழவில்லை. நீ எடுத்துக் கொண்டு போ நான் மறுபடி வரும் போது நீ எனக்கு பொன் வண்டியைக் காட்ட வேண்டும் காட்டுகிறாயா? - குழ (சந்தோஷத்துடன் காட்டுகிறேன். இதை அம்மா ளிடம் காட்டப் போகிறேன். (ஆபரணங்களுடன் வண்டியை இழுத்துக் கொண்டு வேகமாப்ப் போப் விடுகிறான். கோமளாவும் அவனைத் தொடர்ந்து சென்று சற்று நேரத்தில் திரும்பி வருகிறாள்./ கோம அம்மா! வாசலில் குணசீலன் பெட்டி வண்டியைத் தயார் செய்து வைத்திருக்கிறான். ഖണ്ഡ ജി என்னுடைய உடைகளைச் சீர்திருத்திக் கொண்டு இதோ வந்து விட்டேன். (மறைவில் போகிறாள்) (விட்டு வாசலில் குணசீலன் வண்டியுடன் நிற்கிறான்) குணசீலன் : (தனக்குள் அடாடா வண்டிக்குள் போடும் மெத்தையைப் போட்டுக் கொண்டு வர மறந்து விட்டேன்; நல்ல வேளை, சமயத்தில் நினைவிற்கு வந்தது. எருதுகள் ஒடுவ தற்குத் துடிக்கின்றன. வண்டியை நிறுத்தி விட்டுப் போக முடி யாது, என்னுடைய வீட்டிற்குப் பாய் மெத்தையைப் போட்டுக் கொண்டு இதோ வந்து விடுகிறேன். (வண்டியை ஒட்டிச் செல் கிறான்) அந்த சமயத்தில் வீரசேனனுடைய வேலைக்காரன்பத்மநாபன் வேறொரு பெட்டி வண்டியை ஒட்டிக் கொண்டு மாதவராய ருடைய வீட்டு வாசலிற்கு வருகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/123&oldid=887353" இலிருந்து மீள்விக்கப்பட்டது