பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 187 மலர்வதைப் போல, அவர் முகத்தைக் கண்டால் என்னுடைய உயிர் திரும்பி வரும். சந் சரி இப்படியே போகலாம். இதென்ன சமுத்திர கோஷத்தைப் போல் இருக்கிறதே! வஸ பெருத்த கூட்டமாக இருக்கிறதே காரணம் என்ன என்று விசாரியும். 1 சண் சரி கடைசி முறை பறை சாற்றுகிறேன்; துடும், துடும், துடும், துடும்; ஊரு சனங்களுக்கு எல்லாம் தெரிவிப்பது என்னமெண்டால் நகராதிபதி ஊட்டு மாதவராயரு தேவிடியா வஸந்தஸேனையைக் கொன்னுப்புட்டு அவளொடெ நகை எல்லாம் எடுத்துக்கிட்டாரு; அதுக்காவ, அவரை நம்ப மவராசா கொன்னுப்புட ஆக்கினை பண்ணிப்புட்டாங்க. இந்த மாதிரி பண்ணறவங்களுக்கு இப்படியே தலே போயிடும். துடும் துடும் துடும். - வஸ்: ஆகா இதென்ன இது? என் செவிகள் எதைக் கேட்டன. சந் அம்மணி! இதென்ன அதிசயம்! உங்களை மாதவராயர் கொன்றாராம். அதற்காக அவருடைய உயிரை வாங்கப் போகி றார்களாமே! வஸ் : ஆகா பாதகி என்னால் என்துரைக்கு என்ன ஆபத்து நேர்ந்தது சீக்கிரம், சீக்கிரம் என்னை அங்கே அழைத்துப் போம். சந் : இப்படியே வாருங்கள். வேகமாய் வாருங்கள்! வஸ் விலகுங்கள். விடுங்கள். (மாதவராயர் முதலியோர் இருந்த இடத்திற்கு வருகிறார்கள்/ /மாதவராயரைக் கமுவிலிடத்துக்குகிறான்) வல நிறுத்துங்கள் நிறுத்துங்கள் கொல்லப்பட்டவள் இதோ வந்தேன்! நிறுத்துங்கள். 2 சண் : ஆருடா இது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/189&oldid=887496" இலிருந்து மீள்விக்கப்பட்டது