பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 39 அவள் எதற்காக நாடப் போகிறாள். தவிர நான் ஏற்கெனவே ஒரு ஸ்திரீயை மணந்து கொண்டிருப்பவன் ஆயிற்றே! நான் பிரம்மசாரி அல்லவே! நீ சொல்வதில் ஏதோ பிசகிருக்கிறது! ஸோமே : நான் சொன்னது உண்மையே! அதில் யாதொரு பிசகுமில்லை. இராஜாவின் மைத்துனன் தங்களுக்கு என் மூலமாய் ஒரு சங்கதி சொல்லி அனுப்பி இருக்கிறார். மாத எனக்கா? என்ன சங்கதி? ஸோமே : கேவலம் விலை மகளாகிய வஸந்தஸேனையை நாங்கள் எவ்வளவு பலவந்தப்படுத்தியும் அவள் எங்களுக்கு இணங்கவில்லை. இவ்வளவு தூரம் துரத்திக் கொண்டு ஓடி வரும் சிரமத்தை அவள் எங்களுக்குக் கொடுத்து, நித்திய தரித் திரனாகிய மாதவராயன் வீட்டிற்குள் போய் நுழைந்து கொண் டிருக்கிறாள். அவன் மீதே அவள் காதல் கொண்டிருக்கிறாளாம். நாங்கள் அவள் மனதிற்குப் பிடிக்கவில்லையாம். யாதொரு ஆக்ஷேபனையும் இல்லாமல் உடனே அவளை அவனே நேரில் என்னிடத்தில் கொண்டு வந்து ஒப்புவித்தால் தப்பினான். இல்லாவிட்டால் எப்பொழுதும் தீராத என்னுடைய பகைக்குப் பாத்திரனாதல் வேண்டும். அவனிடம் போய் இதைத் தெரிவி. நான் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பேன். நீ என்னை ஏமாற்றப் பார்த்தால் பாக்கைக் கதவின் மூலையில் வைத்து நெரிப்பதைப் போல் உன் தலையை என் பல்லால் நெரித்து விடு வேன். தெரியுமா? என்று இராஜாவின் மைத்துனன் சொன்னான். மாத ஆஹா என்ன ஆச்சரியம்! அப்படியா சொல்லி அனுப்பினான்: வஸந்தஸேனையின் குணமல்லவோ குணம்: நற்குணமில்லை என்று அரண்மனையையே அவள் வெறுக் கிறாளே! இந்த உலகத்தில் பணத்தைக் காட்டிலும் குணத்தை விசேஷமாய்க் கொள்பவரும் இருக்கிறார்களா இது பெரிதும் விந்தையாய் இருக்கிறது! இவளைக் கோவிலில் வைத்துத் தெய்வமாகக் கொண்டாடினாலும் தகும். இவள் பொருட்டாகத் தானே அவன் என்னை அவ்வளவு ஏளனமாய்ப் பேசினான். அதனால் எனக்கு யாதொரு குறைவுமில்லை! (அவள் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/41&oldid=887563" இலிருந்து மீள்விக்கப்பட்டது