பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் - 6] யோக்கியதையைக் கருதாமல் பணத்தையே தாசியர் நாடு வார்கள் என்று சொல்லப்படும் தூஷணை எனக்கு இல்லாமற் போகட்டுமே. மல்லி அம்மணி! மாமரத்தின் புஷ்பங்களெல்லாம் உதிர்ந்து போன பிறகு, அதை வண்டுகள் நாடுதல் உண்டோ? வஸ் . ஆகையினாலேதான் வண்டிற்குக் காமன் என்று ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. அறிவில்லா வண்டுகள் அப்படி நன்றி அற்றதாயும், சுயநலம் உடையதாயும் இருந்தால் நன்றாய்ப் பகுத்தறிவைப் பெற்ற நாமும் அதைப் போலச் செய்தல் வேண் டுமா? மல்லி அப்படியானால் அவரை அடையும் வழியைப் பற்றி யோசனை செய்யத் தடையென்ன? வஸ் அதற்காக நான் ஒரு தந்திரம் செய்திருக்கிறேன். அதை ஹேதுவாக வைத்துக் கொண்டு அவரிடம் திரும்பவும் போய்ப் பார்க்கலாம். ஆனால் அவருடைய பிரியத்தைப் பெறு வது சுலபமான காரியம் அல்ல, என்ன செய்கிறது? மல்லி (புன்சிரிப்புடன்) ஒகோ இந்த எண்ணத்தினாலே தான் ஆபரணங்களை அவருடைய மாளிகையில் வைத்து விட்டு வந்தீர்களோ? வஸ் : (திடுக்கிட்டு) இதென்ன சப்தம்? யார் ஓடி வரு கிறார்கள். யார் இந்த மனிதன்? (மகிபாலன் அவர்களிருந்த இடத்திற்குள் வேகமாப் ஓடி வந்து வளந்தஸேனையின் காலில் விழுகிறான்.) மகி அம்மணி! அபயம்! அபயம்! இந்த ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். வஸ கொடுத்தேன் அபயம் எழுந்திரு மல்லிகா வாசற் கதவை மூடிவிடு. (மல்லிகா போகிறாள் யாரைக் கண்டு இப்படி ஒடி வருகிறாய்? உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/63&oldid=887613" இலிருந்து மீள்விக்கப்பட்டது