பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் திண் இல்லாமெப் போனா, அவனோடெ கூடச் சூதாட லாமான்னு தேட்றியா? . முண் : இம்புட்டுச் சோக்கான பொண்ணு என்னை என்னாத்துக்குத் தேட்றே? நாந்தான் முண்டன்; ஆசையா தேட் றியே எனக்கு என்ன தரப் போறே சொல்லேன். மல்லி ; உனக்கு யாராவது பணம் தரவேண்டுமா? . முண் ஆமா, ஒரு களுதெ 10-ரூபா குடுக்கணும். அய்யோக் கிய முண்டே. அந்த நாயி இந்த ஊட்டுக்குள்ளற நொளஞ்சிதே அவன் ஒனக்கு என்ன சொந்தம்? ஆசெ நாயகனா? திண் : அந்தப் பொணத்தெக் கட்டிக்கினா வாள்ந்து பூடுவே! மல்லி : அடெ ஏது வார்த்தைகள் வர வர அதிகரிக்கின் றன? போதும் நிறுத்துங்கள் அதிகப் பிரசங்கத்தை. இதோ இந்தக் காப்பை அவர் உன்னுடைய கடனுக்காக கொடுக்கச் சொன்னார். எடுத்துக் கொண்டு இங்கு நிற்காமல் நடவுங்கள். முண் : ஆகா சந்தோசம் அப்படியானா ரோக்கியந்தான் அவன்மேலே எங்கிளுக்கு ஒரு கோவமுமில்லெ எப்போ ஒணாமின்னாலும் இனிமேலே வந்து சூதாடட்டும். அடே! வாடா போவோம். • திண் : அடே இவன் எம்புட்டு அளவான பணக்காரக் குட்டியை சம்பாறிச்சுக் கிட்டான் பாத்தியாடா இவ மேலே நவெ ஜிலுஜிலுன்னு மின்னுதுடா (போகிறார்கள்/ /மல்லிகா உள்ளே வருகிறாள்) - மல்லி : அம்மா அவர்கள் காப்பை வாங்கிக் கொண்டு சந்தோஷமாய்ப் போய்விட்டார்கள். வஸ் ! ஐயா நண்பரே! நீர் திரும்பி வராததைப் பற்றி உம் முடைய மனைவி மக்கள் வருந்தியிருப்பார்கள். சீக்கிரம் போய் அவர்களுடைய ஆவலை நீக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/68&oldid=887623" இலிருந்து மீள்விக்கப்பட்டது