பக்கம்:வசந்த பைரவி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன் நிலவு 5? மாக குண்டுகள் விழுந்துகொண்டிருந்தன. போட் பது போட்டபடி அப்படியே விட்டு விட்டு, அவரவர் கள் உயிர் தப்பிக்க முற்பட்டார்கள். அக்கணம் அவர்கள் நால்வரும் ஒன்ருகத் தப்பித்தனர். ஆனல் அடுத்த குண்டிற்கு அவர்களேத் திசை பிரித்து விட்டது விதி. தன் அன்னே குண்டுக்குப் பலியான காட்சியை அவள் கண்கள் கண்டன-அழுதாள்: அழுகை ஓய்ந்து கண் திறந்து பார்க்கையில், தன் முன் ஒரே பிணக்காடாகத் தெரிவதை அவள் கண். டாள். தன் அப்பாவும், அண்ணனும் இங்கேதான் பலியாகியிருக்க வேண்டுமென்று நினைத்ததுதான் தாமதம், அவள் அப்படியே மூர்ச்சித்து விழுந்தாள். .மறுபடியும் அவள் கண் மலர்ந்தாள். அவள் மணிப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பாது காப்பில் இருப்பதை அறிந்தாள். யுத்த அரக்க னின் பயங்கரப் பார்வையினின்றும் ஒரளவு அவள் உயிர் பிழைத்துங்கூட, அவளுக்கு அதில் துளியும் நிம்மதியில்லை. தன் பெற்ருேர்கள், உமின் பிறக் சாகடிக்காமல், சாகடித் குண்டுக்கு இரையாகாமல்

வம் பிறருக்கு அவளத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/53&oldid=887782" இலிருந்து மீள்விக்கப்பட்டது