பக்கம்:வசந்த பைரவி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வசந்த பைரவி தன் உயிரைக் கசக்கிப் பிழிந்து வஞ்சம் தீர்த் துக் கொண்டிருந்தாள். அன்றுங் கூட அப்படித் தான் ! - இனி தனக்கு இவ்வுலகில் வாழ்வில்லை. தாய், தந்தை, அண்ணன் மூவரும் போன் விதிவழியே செல்வதுதான் முடிவு என்று தீர்மானம் கட்டிக் கொண்டு, தற்கொலைக்குத் தயாராகப் புறப்பட்டாள். அவள். அவளேக் கை தட்டி வரவேற்றது. பொங்கு மாங்கடல், அவள் பூரித்தாள். தனிமை அவளுக்குத் தைரியம் சொன்னது-சாக: அலேகளின் அரவணைப் பில் அவள் அணேயப் போன சமயம், அவளேக் காப் பாற்றினுன்-ஆம்: அவன்தான் ஷோக் கம்பெனி முதலாளி. இதை அவள் மறந்துவிட்டாளோ? . அந்த ஷோக்காரனுக்கு ஷாஜிதா ஒரு விதத் தில் நன்றிக்குரியவள்தான். இல்லையென்ருல், அவள் டாக்டர் ரமனின் உயிராக ஆகியிருக்க முடியுமா?. நின்வும்லர்கள் கதம்பச் சரத்தை விட்டு ஒவ் வொன்ருக உதிர்ந்து விடை பெற்றுக் கொண்டன. கண்களில் மண்டியிருந்த மணிகள் அப்பொழுதுதான் அவளுக்குச் சுய உணர்வை அறிவித்தன. விழித் தாள். எதிரே தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தன் கணவரைக் கண்ட்தும், புன்னகையைக் காக் கொடுத்து வாங்கி அணிந்துகொண்டாள் தன்ன ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்குள் போதும் போதுமென்ருகி விட்டது. 'ஷாஜி, ஏன் உன் கண்கள் கலங்கி யிருக் கின்றன:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/54&oldid=887784" இலிருந்து மீள்விக்கப்பட்டது