பக்கம்:வசந்த பைரவி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வசந்த பைரவி அண்ணு. ஒன்ருயிருந்த உன் தங்கையை இவ் வளவு வருஷமாகத் தனியே விட்டு விட்டுத்தானே இருந்தாய்? அண்ணு, நீ எப்படிச் செத்துப் போனுய். ஐயையோ...' ஷாஜிதா புலம்பிக்கொண்டிருந்தாள். ரமன் நீர்வழிந்த கண்களுடன் தன் உயிர் மனே. வியைச் சமீபித்து, அவள் முகத்தைத் தடவிக் கொடுத்து அமைதிப்படுத்தினர். மூடிய விழிகளே. அவள் திறந்தால்தானே? "என் பேருதானே..ஆமா. ஷாஜிதா! தமிழ்ப் பெயர் இல்லை என்கிறீங்களா? மெய்தான். பர்மா விலே இருக்கிறப்போ அப்பாவின் சிநேகிதியின் ஞாபகமாக எனக்கு இந்தப் பெயர் சூட்டினர்கள், வீட்டில். நான்கூட ஒரு ஆசை வைச்சிருந்தேன். எனக்குப் பையன் பிறந்தா, என் அண்ணு பெய ரையே ரமேஷ்னு வைக்கவேணும்னு கனவு கண்டேன். அதுவும் மண்ணுகிப் போச்சு...அண்ணு. ஐயோ...' - - - - - திறந்த உதடுகளைப் பிரித்துத் திரும்பவும் என்னவெல்லாமோ புலம்பிக் கொண்டிருந்தாள் ஷாஜிதா. இமையோரத்தில் கண்ணிர்க் கோடுகள் பிறந்திருந்தன. S S S S S S S S S S S S S S S S இரவு வந்தது:வளர்ந்தது. டேக்-டக்-டக் கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் ஒசை மிகுந்து ஒலித்தது. அதைத் தொடர்ந்து, அறிவிப்பு மணி கண்கணவென்று கர்தம் க்ட்டிக்கொண் அவசரம் போலிருக்கிறது' மதுவாக எழுந்து வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/64&oldid=887806" இலிருந்து மீள்விக்கப்பட்டது