பக்கம்:வசந்த பைரவி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆ, ஒாஜிதா!' 69 நோயைப்பற்றி. அவள் மூளேயை ஏதோ அதிர்ச்சி தாக்கிவிட்டிருக்க வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்தார்கள். ஒருநாள் திடுதிப்பென்று ஷாஜி ஐயோ, அண்ணு' என்று கூப்பாடு போட் டுக் கதறிய சம்பவமும் நினைவுக்கு வந்தது. இந்த நினைவுக் கதிர் ரமனுக்கு உருப் புரியமாட்டாத குழப் பத்தைத் தந்தது. புரியாத புதிராகவும் பட்டது. அன்று அவள் பலம்ாகக் கூக்குரலிட்டு முழங்கிய அவ்வார்த்தைகள் நேருக்கு நேர் நின்று காதோடு காது பொருத்திக் கூறுவது போலிருந்தன. அவ ருக்கு மண்டை கனத்தது; இருதயமும் கனத்தது. ' ஷாஜி...' * "அத்தான். என்னே அழைத்தீர்களா?' என்ருள் அவள். அவளுடைய விழி வரம்பிலே என் அந்தக் கண்ணிர்? கண்ணிர் இல்லையென்ருல் வாழ்க்கையே கிடையாது! ' அத்தான், எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. ரவைகூடக் கவலே வேண்டாம் டிஸ்பென்ஸ்ரிக்குப் புறப்படுங்கள், அத்தான்...' என்ருள் ஷாஜிதா. அவள் புன்னகையை வரவழைத்துக் கொண்டிருந் தாள். மனேவியின் வார்த்தைகள் அவருக்கு நிற்ை வையும் நிம்மதியையும் தந்தன. போப் வருகிறேன், ஷர்ஜி...' என்று கூறி விடை பெற்ருர் ரமன். அப்பொழுது அவரை வழி மறித்தாற்போல அத்தான் என்ற அழைப்பு முன் னேடி வந்தது. திரும்பினர். யார் ஷாஜியா அழைத் தாள்...? அங்கே ருக்மணிகின்றுகொண்டிருந்தாள். இப்போதுதான்வந்தாயா நக்மணி ரெம்பு இம் நல்லதாகப் போயிற்று. ஷாஜியைப் பார்த்துக் கொள். உன் கண் எப்போதும் அவள்மீது இருக்க வேண்டும். என்ன தெரிந்ததா?...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/71&oldid=887822" இலிருந்து மீள்விக்கப்பட்டது