உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைமுக ஸ்நானம்

131

பீம : (புன்சிரிப்போடு) கிருஷ்ணவேணி உலகத்தையே அறியாத சிறிய பெண். என்னுடைய மனசின் அந்தரங்க நிலைமை அவளுக்கெப்படித் தெரியப்போகிறது! என்னுடைய விசனத்தை அவள் எப்படி அறியப் போகிறாள்? எல்லாருடைய விசனமும் அப்படித்தான்; ஒருவரைப் பற்றி உலகத்தார் நினைப்பதொன்று அவர் உண்மையிலிருப்பது வேறு விதம். நீ அன்று ஊர்வசியாக நடித்ததைக் கண்டா ஜனங்கள் எல்லோரும் உன்னைப் போல பாக்கியவதி ஒருத்தியுமில்லை என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அனால், உன்னிடம் நெருங்கிப் பார்ப்பவருக்கல்லவா உன்னுடைய உண்மையான நிலைமை நன்றாகத் தெரிகிறது.

மல்லி : என்னைப் பார்த்தல் விசனப்படுபவள் போலவா இருக்கிறது? அப்படியொன்றுமில்லையே!

பீம : நான் உன் மனசிலிருக்கும் ரகஸியங்களை அறிய விரும்புவதாக நீ நினைக்க வேண்டாம். ஆனால், உன்னைக் காணும் போதெல்லாம் என் மனம் சகிக்க முடியாத எதோ விசனத்தை அடைகிறது. உன்னுடைய வேதனையின் காரணத்தை அறிவிட்டாலும், அதன் பளுவைக் குறைக்க வேண்டுமென்று என் மனம் பதைக்கிறது. அன்று உன்னை ஊர்வசியாகப் பார்த்தபோதே உன்னிடத்திலுள்ள விவரிக்க முடியாத ஒரு சக்தி என் மனத்தைக் கவர்ந்து விட்டது. அன்று உன்னைக் கண்ட நிமிஷத்திலேயே உன்னோடு நெடுங்காலம் பழகினவனைப் போல உன்னிடத்தில் வேரூன்றி அன்பும் பிரியமும் உண்டாகி விட்டது. நீ விசனப்பட்டால் அது என் மனதில் சுருக்கென்று தைக்கிறது. நீ சந்தோஷ பட்டால் என் தேகம் பூரிக்கிறது. இனி உன்னைப் பிரிந்து அந்நியன் போலிருக்க எப்படி முடியும்? ஆதலால் இனிமேல் எப்போதும் இனிமேல் எப்போதும் இந்த சிநேகிதம் நீடித்து நிற்க வேண்டும். உன்னுடைய விசனத்தை மறக்க முயல்வதே எனக்குப் பெரிதும் இன்பத்தைத் தருகிறது. நீ என்னை மறுக்கக் கூடாது. நான் செய்யும் உதவியை எல்லாம் நீ ஏற்று கொள்ள வேண்டும்" என்று பெரிதும் உருக்கமாகக் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/149&oldid=1232866" இலிருந்து மீள்விக்கப்பட்டது