இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடைமுக ஸ்நானம்
133
என்று கூறியவண்ணம் அவளது கையைப் பிடித்தான். அந்தப் பிடி, நெருப்பால் சுடுவதைப் போலிருந்தது.
அவள் முதலில் திகைத்துச் சிறிது நேரம் சும்மாவிருந்தாளாயினும், அடுத்த நிமிஷத்தில் அவள் தனது கையை இழுத்துக் கொண்டு அப்பால் நகர்ந்தாள். தனது விஸனத்தின் காரணத்தை அவனிடத்தில் ஒருவாறு தெரிவித்துத் தன் மீது அவன் கொண்ட காதலை விலக்கும்படி அவனை அவள் பெரிதும் வேண்டிக் கொள்ள, அவனும் அவளை அதற்கு மேல் வற்புறுத்தாமல், அவளது வேண்டுகோளுக்கு இணங்க நேர்ந்தது. என்றாலும், அவன் தனது சிநேகத்தை மாத்திரம் விலக்காமலிருக்கும்படி வேண்ட, அவள் அதை மாத்திரம் ஒப்புக் கொண்டாள்.