மல்லிகாவின் புதிய கணவன்
147
அவள் அரை மனதோடு எழுந்து சென்று கதவைத் திறந்தாள். பீமராவ் வெளுத்து விசனத்தைக் காண்பித்த முகத்தோடு உள்ளே நுழைந்தான்.
மல்லி : உடம்பு கொஞ்சம் அசௌக்கியமோ? முகம் ஒரு மாதிரியாக இருக்கிறதே - என்றாள்.
பீம : அப்படி ஒன்றுமில்லை. அவர்கள் எங்கே காணோம்?
மல்லி : அவர்கள் சொந்தக்காரர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ஏன் நிற்கிறீர்கள்? உட்காருகிறதுதானே.
பீம : (விசனத்துடன்) இல்லை. நான் போக வேண்டும். உன்னிடத்தில் கடைசியாக சொல்லிக் கொண்டு போக வந்தேன்.
மல்லி : (நலிந்த சிரிப்போடு) கடைசியாக சொல்லிக் கொள்ளுகிறதா? எங்கே பிரயாணம்? இனி இங்கே வருவதில்லையா?
பீம : (விசனத்துடன்) ஆம்; இந்த ஊரை விட்டு எங்கேயாகிலும் போய்விடுவதே நல்லது. இந்த ஊரிலிருப்பது எனக்குப் பொறுக்கக் கூடாத வேதனையை உண்டாக்குகிறது. வேறு எங்கேயாகிலும் போனால் என் மனநிலைமை மாறுபடலாமென்று நினைக்கிறேன்.
மல்லி : இதைக் கேட்க எனக்கு நிரம்பவும் விசனமாக இருக்கிறது. எந்த ஊருக்குப் போவதாக உத்தேசம்?
பீம : ஏதாவது ஓர் ஊருக்கு ; இதைத் தவிர வேறு எந்த ஊராயிருந்தாலும் சரி; ஆனால் எங்கே போனாலும் உன்னைப் பற்றி ஒரு க்ஷணமும் விடாமல் நினைத்துக் கொண்டுதான் இருப்பேன். உன்னுடைய க்ஷேமநலத்தைப் பற்றி அடிக்கடி விசாரித்துக் கொண்டுதான் இருப்பேன். நீ இந்த நாடகத்தில் அடைந்த புகழினால் உன் பெயர் எல்லாருடைய வாயிலும் இருக்கிறது. ஆனால் நீ என் மனசிலேயே இருக்கிறாய். இனி உன்னை நான் திரும்பவும் எப்போது காண்பேனோ? - என்றான். அப்போது அவன் கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகி வழிந்தது. அவன் அழுகையினால் தடுமாறிய குரலில், “நான் போகலாமா?" என்று கேட்டான். அதைக் கண்ட மல்லிகா, நிரம்பவும் கலக்கமடைந்து மறுமொழி சொல்ல மாட்டாதவளாய்