மல்லிகாவின் மூன்றாம் கணவன்
175
றாய்! அவனும் நிரம்ப யோக்கியமானவன்தான். அவன் இது வரையில் இந்தச் சங்கதியை என்னிடம் சொல்லாமலிருந்து விட்டானே! ஆகா! அவனுடைய அதிர்ஷ்டம் யாருக்கு வரும்? அவனுடைய அதிர்ஷ்டத்தையடைய என் உடல் பொருள் இன்பம் ஆகிய மூன்றையும் கொடுக்க வேண்டுமானாலும் நான் கொடுத்து விடுவேன். இனி ஆயிரம் சொல்வதிற் பயனென்ன? சரி; கவலைப்படாதே; அதுவும் நல்ல சம்பந்தந்தான். நீ சௌக்கியப் படுவாய். ஆக்ஷேபணையில்லை. உன்னை நான் அடைந்தாலென்ன? அவன் அடைந்தாலென்ன? வித்தியாசமொன்றுமில்லை. இனி எப்போதாவது உனக்கு என்னிடம் எவ்வித உதவி தேவையானாலும் நான் அதைச் செய்யத் தடையில்லை. எப்படியாவது நீ சுகமாயிருக்கிறாய் என்பதைக் கேட்பதே எனக்கு இன்பம்! நான் போய்விட்டு வருகிறேன்" என்று கூறியவண்ணம் எழுந்தார்.
மல்லிகா ஸஞ்சலத்தினால் பெரிதும் வருந்திய மனத்தினளாய்க் கீழே குனிந்து நின்று, "பிரபுவே! என்மேல் ஆயாசம் கொள்ளக் கூடாது. நான் என்ன செய்வேன்? என்னுடைய அதிர்ஷ்டப்படிதானே எல்லாம் எனக்குக் கிடைக்கும். எனக்கு உயிரைக் கொடுத்த தங்களுக்கு, இந்த அற்பமான காரியத்தைச் செய்யக் கூடாதவளாய்ப் போய்விட்டேன். இதை மனசில் வைக்கக்கூடாது. எப்போதும் தங்களுடைய தயவும் அபிமானமும் மாறாமல் இந்த ஏழையின் மேலிருக்க வேண்டும்" என்றாள். அவளது கண்களிலிருந்து நீர் தாரை தாரையாகக் கீழே வழிந்தது.
மோக : (மிகவும் கலங்கி ) அப்படி வித்தியாசமாக நினைக்காதே; இனி நான் உன்னை என்னுடைய சொந்த சகோதரியைப் போல பாவிப்பனேயொழிய வேறல்ல. கவலைப்படாதே - என்று சொல்லிவிட்டு மெல்ல வெளியில் வந்தார்.
வந்த மோகனராவ் தமது ஆசை முற்றிலும் நாசமடைந்ததை நினைத்து விவரிக்கவொண்ணா விசனக்கடலில் ஆழ்ந்தவராய்ப் பலவித எண்ணங்களில் தம்மை மறந்து எங்கெங்கோ அலைந்து கடைசியாகத் தமது ஜாகையை அடைந்து சயனத்திற் போய்ப் படுத்துக் கொண்டார். ஒருவன் இன்பமான கனவு காண்பதிலிருந்து விழித்துக் கொண்டு கனவு போய்விட்டதே என்று விசனப்படுவதைப் போலத் தமது எண்ணம் நிறைவேறாமல்