இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடற்கரையில் கடும் போர்
209
ஜாகைக்குப் போவோம். இதில் ஒருவர் மேலும் குற்றமில்லை. உண்மையை நான் சொல்லுகிறேன். இதன் அந்தரங்கம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவசர நிமித்தம் தஞ்சையிலிருந்து இங்கு வந்தது தெய்வச் செயலாக முடிந்தது. இல்லாவிட்டால் உங்களில் யாருடைய உயிராவது போயிருக்கும். இனி இங்கேயிருப்பது அவமானம்; வாருங்கள் ஜாகைக்குப் போவோம்" என்ற சொல்லி இருவரையும் அழைத்துக் கொண்டு, தனது வீட்டை நோக்கி நடந்தாள். அதைக் கண்டு வியப்படைந்த ஜனங்களும் பிரிந்து போயினர்.