உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

வஸந்தமல்லிகா

மல்லி : நானே மல்லிகா! நானே ஸஞ்சலாக்ஷி; நீங்கள் இங்கு வந்ததும் என்னைப் பார்க்கவே; நான் உயிரோடுதான் இருக்கிறேன் - என்றாள்.

அதைக் கேட்ட வஸந்தராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர் கரைகடந்த ஆவலோடு பாய்ந்து திரும்பவும் அவளை இறுகக் கட்டி அணைத்துக் கொண்டார். ஒரு நிமிஷம் மல்லிகா அதைத் தடுக்க வல்லமையற்று நின்றாளாகிலும், உடனே திமிறி தன்னை விடுவித்துக் கொண்டு கோபத்தோடு, "என்ன இது? முன்னே செய்ய நினைத்த மோசத்துக்கு இது வட்டியா! போதும் அருமை; காரியம் இவ்வளவுக்கு வந்த பிறகு தாங்கள் என்னைத் திரும்பவும் தொட்டு இப்படி அவமரியாதைப் படுத்து வீர்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை " என்றாள்.

வஸ : ஆகா! என்ன வார்த்தை! மோசம்! அவமரியாதை என்ன! என்னிடத்தில் நீ இப்படிப் பேசுகிறாயா? அடீ கண்மணி! என் தங்கமே! என் மனம் பதைக்கிறது! சிரம் சுழலுகிறது! என் உயிர் போய்விடும் போலிருக்கிறது! ஹிருதயம் வெடித்து விடும் போலிருக்கிறது! இனி என்னை இப்படி நடத்தினால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் - என்றார்.

மல்லி : நான் இந்தப் பங்களாவுக்கு இதற்காகவா வந்தேன்? நான் முன்னிருந்த ஜெமீந்தாரின் பேர்த்தி மல்லிகா; என்னுடைய சொத்துக்களை ஒப்புக் கொள்ள வந்தேன். தாங்களும் அதன் பொருட்டே இங்கே வந்தீர்கள். அதைவிட்டு வேறு விதத்தில் தாங்கள் பரிகாசம் செய்து கொண்டிருப்பது அழகல்ல. என் பேரில் எழுதப்பட்ட சாஸனம் இதோ இருக்கிறது. அதைப் பார்க்கலாம்; இனி நாம் வந்த காரியத்தை முடிப்பதன்றி, வேறு எவ்விதச் சொந்தமும் பாராட்டுவது சரியல்ல - என்று கடுமையாகப் பேசியவண்ணம் தனது மடியிலிருந்த சாஸனத்தை எடுத்து அவரிடம் காட்டினாள்.

வஸ : ஆகா! மல்லிகா! நீதானா இதன் சொந்தக்காரி! அடி என் மாணிக்கமே! நீ ஏன் என்னிடத்தில் முகமறியாத அந்நிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/272&oldid=1234413" இலிருந்து மீள்விக்கப்பட்டது