உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேடன்வலைப் பேடன்னம்

25

ஆகா ஸ்திரீகளையே இனி கண்ணெடுத்துப் பார்ப்பதில்லையென்று நான் செய்துகொண்ட உறுதியை மறந்துவிட்டேனே! என்ன என்னுடைய பேதமை என்னை அறியாமலேயே இவளிடத்தில் ஒருவித அன்பும், கவர்ச்சியும் உண்டாயினவே! என்ன காந்தி என்ன பேரழகு குணமோ இனிமையிலும் இனிமை துன்புற்றுத் துவண்டு தடுமாறும் மனிதருடைய மனதுக்கு அமைதியும் இனிமையுமூட்டும் மருந்து மங்கையர்தாமோ என்ன கடவுளின் அமைப்பு துன்பமுண்டாவதும் பெண்டீரால், இன்பமுண்டாவதும் அவர்களால்" என்று பலவாறு தமக்குள் சிந்தித்து நிலை கலங்கித் தடுமாறிய மனத்தோடு வஸந்தராவ் சமுத்திரத்தை நோக்கி நடந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/43&oldid=1229213" இலிருந்து மீள்விக்கப்பட்டது