பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விளம்புமாயாபுரியதற்கு மேற்றிசை யளந்திடு மூவிருகுரோசமற்றபின் - களங்கொள்காளிங்கியுங்காமர்வாணியுங் குளிர்ந்தவான்பொருகைான்னதியுங்கூடுமே. எனப் பழனிப்புராண்த்துள் வருதலானுணர்க. இனிச் செங்குட்டுவன் மலைகாண்குவமென்று தன்கோப்பெருக் தேவியுடனும், இளங்கோவடிகளுடனும், தன் படைத்தலைவனுன வில் லவன் கோதையுடனும், அழும்பில்வேளுடனும்,படையுடனும்,சேடி யர்கூட்டத்துடனும்,மற்றைப்பரிவாரங்களுடனு ம்பெருங்கூட்டமாக எல்லா உபகரணங்களையுங்கொண்டு வஞ்சிமுற்றத்தை நீங்கிச்சென்று பெரியமலைகளுக்கிடையே ஊடறுத்துச்செல்லும் பேர்யாற்றின்கரை யின் மணலெக்கரிற்றங்கியிருந்தான் என்று சிலப்பதிகாரக் காட்சிக் காதையாற்றெரிவது. இச்செங்குட்டுவன் வாசக்தலமானவஞ்சியோ ஆன்பொருநையாற்றுக்கரைக்கட் கட்டப்பட்ட கோட்டை யி னே யு ைட ய தென்பது முற்காட்டியபுறப்பாட்டடிகளாற்றெரியலாம். இதனும் - செங்குட்டுவன் ஆன்பொருநைக்கரையிலுள்ளவஞ்சியை நீங்கி எல்லாருடனுஞ்சென்று பேர்யாற்றங்கரையிற்றங்கியிருந்தா னென்றே தெளியப்படுவதாகும். பேர்யாற்றங்கரையிலே வஞ்சி யுள்ளதென்று அால்கள் கூருமையானும், ஆன்பொருகைக்கரையிலே கருவூர்வஞ்சி எனப் பெயரியஊர் உள்ளதென்றே அால்கள்கூறுத லானும் ஆன்பொருநைக்கரையிலுள்ள ஒரிடத்தைநீங்கிப் பேர் யாற்றங்கரையிலோரிடத்தே தங்கிெைனன்றே ஐயமறத்துணியப்படு மென்க. பேர்யாற்றங்கரையினின்று செங்குட்டுவன் தன் வஞ்சிக் குத் திரும்பியதைக்கூறியவிடத்து வாடாவஞ்சிமாநகர்புக்கபின் ' என்பதற்கு அரும்பதவுரையாசிரியர் பொலிவுபெற்றகருவூரிலே --- திரியச்சென்று அரசன் பேராற்றங்கரையினின்றும்போந்து புக்க பின்' என்று விளங்கவுரைத்ததனையும் நோக்கிக்கொள்க. ஈண்டும் பேராற்றங்கரையினின்று நீங்கி ஆன்பொருநைக்கரையிலுள்ள கன் ஒார்க்குப்புக்கபின் என்று கொள்ளுதற்கே எல்லா நால் களும்போல ர் துணையாவது என்றுணர்க. எங்கேனும் ஒரிடத்துப் பேர்யாற்றங் கரையில் வஞ்சியிருப்பதாகக்கூறியிருந்தாலன்ருே, பிறவிடங்களி லெல்லாம் வஞ்சி ஆன்பொருநைக்கரையிலிருப்பதாகக்கூறுதல்பற்றி இரண்டியாற்றுப்பெயரும் ஒர்யாற்றின் பெயரோ என்கின்ற ஐய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/49&oldid=889273" இலிருந்து மீள்விக்கப்பட்டது