பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. மக்களாட்சியின் மாண்பு சென்னை மாநிலத்தலைமை அமைச்சராக திரு. இராச கோபாலாச்சாரியார் அவர்கள் 1938ஆம் ஆண்டில் பொறுப் பேற்றுக்கொண்டிருந்த போது, தமிழ்நாட்டு மாணவர்கள் இந்திமொழியைக் கட்டாயமாகப்படிக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டுவந்த அந்தநாள் தொடங்கி, திராவிட இயக்கம் மேற்கொண்டு வந்த, வரும், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு கட்டமாக, 1986ஆம் ஆண்டு, "தேவநாகரி வடிவில் அமைந்த இந்திதான், இந்தியாவின் ஆட்சிமொழி' என்ற தொடர் அடங்கிய இந்திய அரசியல் சட்டம் 343|1 பிரிவு நகலைத்தீயிட்டுக்கொளுத்திய தற்காகத் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்களுள், ! தமிழகசட்டமன்ற உறுப்பினர்களும் பலர் இருந்தனர். "இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவைக் கொளுத்தியது அரசியல் சட்டத்தை அவமதித்ததாகும் அரசியல் சட்டத்தை மதிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்களின் இச்செயல் சட்டமன்ற மரபை மீறியதாகும்". என்று கூறி 1996ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் பேராசிரியர். க. அன்பழகன் உள்ளிட்ட ஏழு சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைப்பறித்து தீர்ப்பளித்து விட்டார் சபாதாயகர். வஞ்-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/100&oldid=888786" இலிருந்து மீள்விக்கப்பட்டது