பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - வஞ்சி முதுரர் சட்டத்தை எரித்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழந்து விட்டனர் என சபாநாயகர் தீர்ப்பு அளித்துவிட்ட பின்னரும், 1986 டிசம்பர் 5 ஆம் நாள், மதுராந்தகம் ஆறுமுகம், அரக்கோணம் இராஜி, ஆபிரகாம் ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி என்ற சொற்றொடர் அச்சிட்ட தாளைக்கொளுத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைபில் அடைக்க்ப்பட்டனர். சட்டமன்றம் தொடர்பான தீர்ப்பு வழங்கும் அதிகாரம் சபாநாயகருக்கு சட்டசபை நடந்து கெகண்டிருக்கும் நாட் சளில் மட்டுமே அல்லாது, அது நடைபெறாத நாட்களிலும் உண்டு ஆகவே. முன்பு ஏழு சட்டமன்ற உறுப்பினர்களில் பதவியைப்பறித்து சபாநாயகர் உத்தரவிட்டது போல, இம்மூவரின் பதவிகளையும் பறித்து உத்தரவு பிறப்பித் திருக்கலாம். ஆனால், அது செய்பப்படவில்லை. அதற்கு மாறாக, 1986 டிசம்பர் 22ஆம் நாள், சட்டசபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, முந்தைய ஏழு பேரோடு, இம்மூவரையும் சேர்த்து பத்து சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டது. அது முந்தைய ஏழுபேர் பதவியைப் பறித்த சபாநாயகர் உத்தரவு போல் அல்லாமல், சட்ட மன்றத்தீர்மானம் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தான் ஒரு சிக்கல். சபாநாயகர் உத்தரவின்படி பேராசிரியர் உள்ளிட்ட அந்த ஏழுபேர், 1986 டிசம்பர் 22ஆம் நாள் அன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டதாகக் கொள்ளலாம். ஆனால். ஆறுமுகம், இராஜு, ஆபிரகாம் ஆகியவர்களைப்பற்றி சபாநாயகர் பதவி இழப்புத் தீர்ப்பு வழங்காமையால் அம்மூவரும் 22-12-86 வரை சட்டமன்ற உறுப்பினர்கள் தான் 22-18-86 அன்று கூட்டப்பட்ட சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முழு உரிமை பெற்றவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/101&oldid=888788" இலிருந்து மீள்விக்கப்பட்டது