பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 109 வதையே அறிவிக்காமல் சட்டமன்றத்தைக் கூட்டுவது முறை யாகாது. அவ்வாறு கூட்டிய கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற விதிகளின்படி முறையாகக் கூட்டப்படாத கூட்டம் ஆகும் அக்கூட்டத்தில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியும், நிறை வேற்றப்பட்ட எந்தத் தீர்மானமும் செல்லுபடி ஆகாதன ஆகும். . மேற்படி முடிவை உறுதி செய்யும் வலுவான ஆதாரங் கள் சிலவும் இருக்கின்றன. நாடாளுமன்ற நடைமுறை மரபுகளுக்கு வழிகாட்டி நூலாகக் கொள்ளப்படுவது: நாடாளுமன்றத்தில் செயலாளர்களாகப் பல்லாண்டு பணி புரிந்து அத்துறையில் முதிர்ந்த அறிவு பெற்றவர்களாகிய திருவாளர்கள் எம். என். கவுல் என்பாரும், திருவாளர் எஸ். எல். ஷக்தர் என்பாரும் எழுதிய "பாராளுமன்றத்தின் பழக்கவழக்கமும் நடைமுறை ஒழுங்கும்' (Practice and Procedure of Parliament) srsirao prevregib. அதில் பின்வரும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. 'செய லாளர் உறுப்பினர்களுக்குத் தனித்தனி அழைப்பாணை அனுப்புவார். கூட்டம் நடைபெறுவதற்கு முடிவெடுத்த நாளுக்கும் கூட்டம் கூட்டப்பட வேண்டிய நாளுக்கும் இடை யிலான காலம், மிகக் குறுகியதாக இருப்பின், அத்தொடர் கூட்டம் தொடங்கப் பெறுவதை உறுப்பினர்களுக்கு அறிவித்துவிடலாம்: அழைப்பாணைகள் செய்தித் தாள் கள், வானொலி மற்றும் தந்திகள் மூலம் செய்யப்பட வேண்டும்." அழைப்பானை அடங்கிய பதிவு அஞ்சல் உறை, ஓர் உறுப்பினர்க்குப் பட்டுவாடா செய்யப்படாமல் போய் விடுமாயின், அவ்வுறுப்பினரோடு தொடர்பு கொள்ளத்தக்க அவரின் தற்கால முகவரி சட்டமன்ற செயலகத்தவரால் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அந்த முகவரிக்கு அழைப்பாணை அனுப்பப் பெறவேண்டும். '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/104&oldid=888794" இலிருந்து மீள்விக்கப்பட்டது