பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வஞ்சி மூதூர் அல்லது மத்திய, மாநில அரசின் நிர்வாக ஆணைப்படி. காவலில் வைக்கப் பெற்றாலும், தண்டிக்கும் நீதிபதி. குற்றவியல் நீதிபதி (மாஜிஸ்ட்ரேட்) அல்லது நிர்வாக அதிகாரி அதுபற்றிய செய்தியைப் பேரவைத் தலைவருக்கு உடனே தெரிவிக்க வேண்டும். அதில், முறையே கைது செய்ததற்கான, அல்லது காவலில் வைத்திருப்பதற்கான அல்லது தண்டித்ததற்கான காரணங்களையும் குறிப்பிட். டிருத்தல் வேண்டும். - மேலும், அவ்வுறுப்பினர் எவ்விடத்தில் காவலில் வைக்கப்பெற்று உள்ளார் என்கிற விவரத்தையும் பேரவைத். தலைவரால் வரையறுக்கப் பேற்றுள்ள பொருத்தமான படிவங்களில் (இணைப்பு அ அல்லது ஆ) தெரிவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடுசட்டமன்றப் பேரவைவிதி 314-தெளிவாகக் குறிப்பிடுகிறது. கைது செய்யப்பட்ட அம்மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் எந்தச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். என்ற விவரம் அன்றே சபாநாயகருக்கு நீதிபதிகளாலும் சிறை அதிகாரிகளாலும் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு செய்தித்தாள்கள் வழங்கப்படுவது இல்லை. வானொலி வசதியும் இல்லை. இந்த நிலையில் விதி 3 (அ)-வின்படி வெளியிடப்பட்ட அரசிதழ்களோ, (ஆ)-2வது பத்தியின்படி கொடுக்கப்பட வேண்டிய தந்திகளோ, சிறைக் கண்காணிப் பாளர் அல்லது சிறை அதிகாரி மூலம் அந்த மூன்று உறுப் பினர்களுக்கும் அனுப்பப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் சிறையில் இருந்த அம்மூன்று உறுப்பினர்க்ளுக்கும் அரசி தழோ, தந்தியோ அனுப்பப் பெறவில்லை. " . . . செல்லுபடி ஆகாத சட்டமன்றக் கூட்டம் : r - 234 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர்க்கு ஒரு கூட்டத் தொடர் நடைபெறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/103&oldid=888792" இலிருந்து மீள்விக்கப்பட்டது