பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 111 அவையில் இருக்க வேண்டும் என ஒரு உறுப்பினர்க்கு ஆனை பிறப்பித்து விட்டால், அவையின் அந்த ஆணை அவருக்கு முறைப்படி கொண்டு சேர்க்கப்பட வேண்டும். சேர்க்கப்படவில்லையேல், அப்படி சேர்க்கப்படுவது இயலாத ஒன்று என்பதை உறுதிப்படுத்தும் சான்று கொடுக்கப்பட வேண்டும். அந்த உறுப்பினர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால். அந்த உறுப்பினர் அவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பினால், தக்க பாதுகாப்போடு, அந்த உறுப்பினரை அவைக்குக் கொண்டு வருமாறு, சிறை அதிகாரிக்கு ஆணை யிடுவது நடைமுறை வழக்கமாகும். ஏமாற்று மோசடிக் குற்றத்திற்கான சதியில் ஈடுபட்டார் என்பதற்காக, லார்டு கோக்ரன் (Lord Cochrane) என்பவர் தண்டிக்கப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் பாராளுமன்ற விருப்பத்திற்கிணங்க, காவல் துணையோடு அவைக்குக் கொண்டுவர அனுமதிக்கப் பட்டார். அது மட்டுமல்லாமல், லார்டு கோக்ரன் ஆவையில் தன்னுடைய இருக்கையில் இருந்து தான் குற்றம் அற்றவர் என்று வாதிடவும் பேரவைத் தலைவர் விரும்பி அனுமதித் தார்.8 - - பொய்க் கையெழுத்திட்ட குற்றத்திற்காகத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட பேக்கர் (Baker) என்ற நாடாளுமன்ற உறுப்பினர்க்கு, அவைக்கு வருவதற்கான அழைப்பு அனுப்பப் பெறவில்லை. ஆயினும் அவரை அவையிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் அவையில் கொண்டுவர இருக்கிறது. இது குறித்து ஏதேனும் எழுத வேண்டுமாயின் பேரவைத் தலைவருக்கு முறையிட்டுக் கொள்ளலாம் என்ற கடிதம் ஒன்று உள்துறைச் செயலாளர் மூலம் அவருக்கு அனுப்பப்பட்டது. அது குறித்து, அவைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/106&oldid=888798" இலிருந்து மீள்விக்கப்பட்டது