பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 - வஞ்சி மூதூர் தலைவருக்கு எழுதிய கடிதம், அவரை நீக்கும் தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்னர் அவைக்கு அறிவிக்கப்பட்டது." பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதியை இழந்து விட்டவர் எனக் கருதப்பட்டவர்களுக்கும், அவர்களைப் பதவி இழக்கப் பண்ணும் தீர்மானம் அவையில் நிறைவேறுவ தற்கு முன்னர், அவர்கள் அவைக்கு வரவும், வந்து தம் பதவி இழப்புத் தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்பதற் கான காரண காரியங்களைக் கூறி வாதிடவும் வாய்ப் பளிக்கும் இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்து உயர்ந்த மரபுதான் என்னே: தண்டனை பெற்ற கைதியாகச் சிறையில் இருக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்க்கு சட்டப் பேரவைச் செயலகத் தோடும், பேரவைத் தலைவரோடும், கடிதத் தொடர்பு கொள்ள உரிமை உண்டா என்ற கேள்வி எழுந்த போது, சென்னை உயர்நீதி மன்றம் பின்வரும் தீர்ப்பினை வழங்கி யிருப்பதையும் திருவாளர் கவுல் அவர்கள் தம்முடைய நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். தண்டனை பெற்ற ஒரு கைதி, தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து, அதற்கான சம்பளமும் பெற்றுக் கொண்டு, சட்டப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வ தற்கான அழைப்பையும் பெற்றுக் கொண்டு வரும் வரை, அவர் சட்டப்பேரவை செயலகத்தோடு கடிதப் போக்கு வரத்து வைத்துக் கொள்ளலாம். பேரவைத் தலைவருக்கும் உரிமைக்குழு தலைவருக்கும் முறையீடு செய்து கொள்ள லாம். அக்கடிதப் போக்குவரத்தினை எந்த அதிகாரியும் தடுத்து நிறுத்தக் கூடாது, இந்த உரிமை அய்யோ பாவம்' எனக் கருதிக் கொடுத்த நீதி அன்று, மாறாக பேரவையில் தொடர்ந்திருக்கும் உறுப்பினர் என்ற உரிமையில் அரசியல் சட்டம் 194(3)ன் கீழ் உரிமை பெற்ற நீதி ஆகும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/107&oldid=888800" இலிருந்து மீள்விக்கப்பட்டது